பக்கம்:தமிழின் வெற்றி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்டடிப்புக்ழ்வேன்! 德 பினர். அன்த்க் கேட்டு அர்சவையில் இருக்த் சான்றேர்கள் யாவரும் மட்டில்லாத மகிழ்ச்சியை அடைந்தனர். 'யார்க்கும் இல்லாத புகழ் இது" என்று அவர்கள் பாராட்டினர்கள். புலவரும் வீரரும் படைத் தலைவரும் அமைச்சரும் சான்ருேரும் பிறரும் அந்த அவையில் கேட்ட பாடல்களில் தங்களுக்கு மிக்க விருப்பமானதைப் பற்றி எண்ணி இன்புற்றன்ர். - -

ஒருவாறு புலவர்கள் தங்கள் கவிகளை யெல் லாம் சொல்லிவிட்டார்கள். இன்னும் யார் என்ன சொல்லப் போகிருரர்கள் என்று அவைக்களத்தில் இருந்தவர்கள் ஆவலோடு பார்த்தார்கள். அங்கே ஒரிடத்தில் தனியே பெண்கள் சிலர் அமர்ந்திருங் தார்கள். பாட்டுப் பாடி ஆடும் விறலியர் சிலரும், அரசனுக்கு ஏவல் புரியும் மகளிரும் அங்கே இருந் தார்கள். அவர்களிடையே ஒரு பெண் புலவரும் இருந்தார். மாருேக்கம் என்ற ஊரிலிருந்து வந்தவர் அவர்; ந்ப்பசலையார் என்ற பெயர் உள்ளவர்.

ஆடவர் கூட்டத்தில் இருந்த புலவர்கள் தங்கள் பாடல்களைச் சொன்னபோது நப்பசலையார் அவற் றைக் கேட்டுக்கொண்டே இருந்தார். எல்லோரும் தம்முடைய கவிகளைச் சொல்லி முடித்த பின்னர், இன்னும் யாராவது பாடல் சொல்லப் போகிருரா என்று பார்த்தார். ஒருவரும் சொல்வதாகக் காண் வில்லை. அப்போது, ' நான் ஒரு பாடல் சொல்ல் லாமா?' என்று மெல்லக் கேட்டார்.

அதுவரையில் அப் பெண்புலவர் அங்கே இருக் ததை மற்றப் புலவர்கள் மறந்தே போயிருந்தனர்.

அவர் இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் அவர்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/9&oldid=574773" இலிருந்து மீள்விக்கப்பட்டது