பக்கம்:தமிழின் வெற்றி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தமிழின் வெற்றி

சிவபெருமான் எவ்விடத்திலும்இருக்கிருர் அல்லவா? அவர் உலகமே திருவுருவமாக விளங்குகிறவர். ஐம் பெரும் பூதங்களும் சந்திர சூரியர்களும் உயிரும் அப்பெருமானுடைய திருவுருவங்கள். அதல்ை தானே அட்ட மூர்த்தி என்று இறைவனே நூல்கள் சொல்கின்றன? அப்பர் சுவாமிகள், !

இருதிலளுய்த் தியாகி நீரு மாகி

  • இயமான ஒய்எறியும் காற்று மாகி

அருநிலைய திங்களாய் ஞாயி ருகி

ஆகாச மாய்அட்ட மூர்த்தி யாகிப்

பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்

பிறர்உருவும் தம்உருவும் தாமே ஆகி

நெருதலையாய் இன்ருகி நாமே யாகி

திமிர்புன் சடையடிகள் நின்ற வாறே

என்றல்லவா திருவாய் மலர்ந்தருளியிருக்கிருர் ? * பிறர் உருவும் தம் முருவும் காமே ஆகி என்று சுவாமிகள் சொல்வதை ஊன்றிக் கவனித்துப் பாருங்கள். அருகக் கடவுள் என்றும் வேறு வகை யாகவும் பிற சமயத்தார் வணங்கும் பிறர் உருவம் அவருடையனவே என்று திருநாவுக்கரசர் சொல் கிருரே. அதன்படி ஜைனர்கள் கட்டும் கோயிலில் அருகனுக எழுந்தருளி யிருக்கிறவன் சிவபிரான்

முன்னே உட்கார்ந்திருந்த சைவ அன்பர்கள் தேவாரப் பாடலேக்கேட்டு மகிழ்ந்தனர். முதியவரோ,

சிவபெருமானுடைய வியாபகத்தைப் புலவர் கூறும் போது மனம் உருகிப் போனர். யாரோ ஒரு சைவர் பிரசங்கம் செய்வது போலத் தோன்றிற்றே ஒழிய,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/98&oldid=574863" இலிருந்து மீள்விக்கப்பட்டது