உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 பள்ளியறை எமன் வயிற்றிலே அந்தப் பருவப் பெண், பருவப் பெண்ணின் வயிற்றிலே அக்கினி பகவான் ! பகல் நேரம் வந்தால் சும்மா இருக்கக் கூடாதே என்று, அந்தப் பருவப்பெண், எமன் வயிற்றுக்குள்ளேயே தன் வயிற்றிலிருக்கிற அக்கினி பகவானை உமிழ்ந்து, எமனுடைய வயிற்றையே பள்ளியறையாக பகல் நேரமெல்லாம் ஆக்கிக் கொண்டாள். பிறகு இரவு நேரத்தில் வழக்கம்போல் எமன் அவளை உமிழ்வதும், அவளோடு இன்பமாக இருப்பதும் வாடிக்கையாக இருந்தது. இதற்கிடையே வாயுபகவான் உலகமெல்லாம் தேடுகிறான்; அக்கினியைக் காணவில்லை. அக்கினி இல்லாவிட்டால் உலகம் இயங்குமா? சிகரெட் பிடிக்க நெருப்பு எழுமா? அடுப்பெறிக்க விறகுக் கட்டையில் தீ வருமா? எனவே, அக்கினியைக் காணாமல் உலகமெல்லாம் அலறுகிறது அந்த நேரத்திலே உலகைச் சுற்றிப் பார்க்கச்சென்ற ரிஷியும் ரிஷிபத்தினியும் தேவலோகம் திரும்புகிறார்கள். பெண்ணைக் காணவில்லை, ஒன்றும் புரியவில்லை. முறை யிடுகிறார்கள். அந்த நேரத்திலே வாயு பகவான் - இந்த விஷயங் களையெல்லாம் இரகசியமாகத் தெரிந்து வைத்துக் கொண்டு ஒற்றனாக இருக்கிற வாயு பகவான்- இதை வெளிப்படுத்த வேண்டும் என்று தேவர்களுக்கு விருந்து வை வத்து, சிறப்பு விருந்தினர்களாக சிவன், விஷ்ணு. பிரம்மா. எமன் அனைவரையும் அழைக்கிறான். தேவேந்திரன் உட்பட. அனைவரும் வருகிறார்கள். வந்திருக்கிறார்கள். பெற்றோர்களும்