பக்கம்:தமிழின எழுச்சி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 103


தயங்கக்கூடாது. 'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்னும் பழமொழி உங்கட்குத் தெரியாததன்று. அத்துடன் புறநானூற்றுப் புலவர் பெருந்தகை கோவூர் கிழாரின் வரிகளையும் நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள். ஒருவேளை அவை மறந்து போயிருப்பின் மீண்டும் ஒரு முறை நினைவூட்டிக் கொள்ளுங்கள். அவை இவை:

ஒருவீர் தோற்பினும் தோற்பதுங் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே;
குடிப்பொருள் அன்றுநும் செய்தி. - (புறம் : 45:55-7)

தென்மொழி சுவடி - 14, ஓலை - 2, மே -1977