பக்கம்:தமிழின எழுச்சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
செந்தமிழ்நாட்டின்
தாய்க்குலத்திற்கு ஒரு வேண்டுகோள்!


அன்பெனுஞ் செங்கோலை ஏந்தி, அடக்கமெனும் மணிமுடி சூடி துன்பத்திலும் தளர்விலாத துணிவெனும் படையைத் தாங்கி, இல்ல மெனும் பேரரசை இனிதுடன் நடத்துவிக்கும் நல்லற மகளிர்க்கு நாங்கள் ஒன்று கூற விரும்புகின்றோம்.

செந்தமிழ் நாட்டுத் திரு மடவார் பற்றிய பண்டைப் பேரிலக்கியங்களிற் பற்பல செய்திகள் உண்டு. மனையறம் ஒன்றினையே தலையறமாகக் கொண்டு, தம் வாழ்வுக்குப் பெருமை கூட்டுகின்றோனும், அறவாழ்வுக்கு நல்வழி காட்டுகின்றோனுமாகிய கணவனைப் பேணுதலும், அருமையாய்ப் பெற்றெடுத்தப் பெருமை சேர் மக்களைப் புரத்தலும், செல்விருந்தோம்பி வருவிருந்து எதிர் கோடலும், இடுக்கண் காலத்தே, இனிது நடந்த இல்லறம், கல்லில் மோதிய கலம்போற் சிதறுண்டு போகாமல் கட்டிக்காத்தலும் ஆகிய நற்செயல்களைச் செய்து புகழ்பெற்ற பெண்மணிகளையே இலக்கியத் தெங்கணும் காணலாம்.

இற்றைக்காலத்தே கல்வி வாயாதவரும், வாய்த்தவரும் பெண் மைக்கணிகலனான பெருநாணம் ஊழ்த்துப் போலி நாகரிகப் புண் பகட்டுப் போர்வையால் தம் உடலை மூடாமல் மூடி, பார்க்கும் ஆடவர் எத்திறத்தவராயினும், அச்சமும், பணிவும் தோன்றத்தகு அடக்கமும், தாய்மைப் பெற்றியும் அறவே நீக்கி விழாக்காலம்போல் எக்காலத்தும் உலாவும் மகளிரையே காண்கின்றோம். பெண்கள் விடுதலை என்று