பக்கம்:தமிழின எழுச்சி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 147


ஒருமுறை திரு.ம.கோ.இரா. உங்களை விட்டுப் பிரிந்துபோய் தனிக்கட்சி ஏற்படுத்திக் கொண்டதற்காக நீங்கள் மிகவும் மனத்துயரம் கொண்டுள்ளதாகவும், அதனை ஆறுதல்படுத்தி மாற்ற வேண்டும் என்றும் என்னிடம் கடலூர் வந்து வேண்டிக்கொண்ட என் அருமை நண்பர் ’டார்பிடோ'சனார்த்தனம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக, சென்னை வந்து உங்களைச் சந்தித்து ஆறுதல் கூறிச் சென்றேன். அதை மறந்து இருக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

இரண்டாவது முறை தென்மொழி சென்னை வந்த பின்னர், மலேசிய அன்பர்கள் சிலர், தங்களையும் என்னையும் அங்கு அழைக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன், தங்களிடம் நேரில் அழைப்பு விடுப்பதற்காக, என்னையும் வேண்டி அவர்களுடன் அழைத்து வந்தார்களே, அப்பொழுது, அந்த இரண்டாவது முறையும் நமக்குள் நடந்த உரையாடலை மறந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகின்றேன். ஏனெனில், அப்பொழுதுதான் நீங்கள் நெருக்கடி நிலையில் வீழ்த்தப்பட்டு, அடுத்து வரும் தேர்தலைச் சந்திக்க இருந்தீர்கள். அப்பொழுது கேட்டீர்கள், 'ஐயா, நாம் மீண்டும், அரசமைக்க வாய்ப்பிருக்கிறதா?' என்று. உங்களுக்கு நினைவாற்றல் மிகுதியாக உள்ளதால் இக்கேள்வியை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அதற்கு உங்களிடம் நான் சொன்னேன், 'நீங்கள் கிட்ட வைக்க வேண்டியவர்களை எட்டவும், எட்ட வைக்க வேண்டியவர்களைக் கிட்டவும் வைத்துக் கொண்டீர்கள்; அதனால்தான் தோல்வியுற்றீர்கள். இந்த நிலை மாறும் பொழுது ஒருவேளை நீங்கள் பதவிக்கு வரலாம் என்று சொன்னேன். இதையும் மறந்திருக்க இயலாதென்று கருதுகின்றேன்.

இனி, மூன்றாம் முறையாக, நான் ஐரோப்பா புறப்படுவதற்கு ஓரிரண்டு நாள்களுக்கு முன்னர், திரு.அமிர்தலிங்கம் அவர்கள் தில்லியில் திருவாட்டி இந்திராவையும், திரு.பார்த்தசாரதியையும் இறுதியாகச் சந்தித்துப் பேசியபின் செய்தியாளர்களிடம், 'வேறு நல்ல முடிவு வருமானால், தாம் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு விடுவதாகப் பேசியதை, வானொலியிலும் தொலைக்காட்சியிலும் கேட்டுவிட்டு, உங்களை அன்று இரவே பார்க்கத் துடித்து, நீங்கள் தஞ்சை சென்றிருந்ததால் மறுநாள் காலை நீங்கள் சென்னை திரும்பியபின், அரசுத் தோட்டத்தில் உள்ள உங்கள் கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஏறத்தாழ இரண்டு மணிநேரம் உரையாடி, 'ஐயா, அமிர்தலிங்கம் தமிழீழக் கோரிக்கையிலிருந்து பின்வாங்கி விடுவார்போல் தெரிகிறது; அவ்வாறு ஒரு நிலை வருமானாலும், நீங்கள், இதுவரை வெளிப்படுத்தி வந்த தமிழீழக்-