பக்கம்:தமிழின எழுச்சி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

198 • தமிழின எழுச்சி

இம்மியேனும் தகர்க்க முடிந்ததா? அதன் நுழைப்பு வேகத்தைத் தடுக்க முடிந்ததா? இன்றைக்கு அ'து எப்படிப்பட்ட அஞ்சத்தக்க பெரும் பூத மாக வளர்ந்து, இங்குள்ள வலிவு பெறாத தேசிய இனமக்களை எவ்வாறு மூளை மழுக்கமும், மெதுவாகக் கொல்லும் நஞ்சைப்போல் உயிர் நலிவும் செய்து கொண்டு வருகிறது! மக்கள் வரிப் பணத்திலேயே அ’து உயிர் வாழ்கிறது; உடல் கொழுக்கிறது; பிற இன மக்களைத் தன் துடிப்பான, கொழுத்த கால்களை அழுத்தமாக ஊன்றி, அடிமைப்படச் செய்கிறது! இந்திரா, மிகக் கரவாகவும், இரக்கமற்ற அரக்கத்தனமாகவும் இந்திக்குச் செய்து வைத்த அடிப்படை ஆக்கச் செயல்களை யடுத்து, இராசீவின் கொடுங்கூன்கைகளால் அதற்கு வலிவான வழியமைத்துக் கொடுத்த பின், இந்தியரக்கி எல்லா மாநில மக்களையும் ஏறி மிதித் தன்றோ வெற்றி நடைபோட்டு வருகிறாள். எனவே, இந்த நிலையில் நம் இந்தியெதிர்ப்புக் கொள்கைகள் எங்கே? முயற்சிகள் எங்கே? போராட்டங்கள்தாம் எங்கே? இவையெல்லாம் கலைஞர்க்குத் தெரியாதனவா? அவர் உணராதனவா?

இனி, வெறும் இந்தியெதிர்ப்பு உணர்வு, இன்றைக்குப் பயன்படாத வகையில் - அஃதாவது எதிர்த்தால் மட்டும் போதாது என்ற நிலையில் - தடுத்த நிறுத்த வேண்டும் - அல்லது அணை போட்டுத் தடுக்கவேண்டும் என்ற நிலையில் - இன்றைக்கு அது பெருகிப் பரந்து வலுப்பெற்றுத் தன் கொடிய இறக்கைகளை விரித்துக் கொண்டு, நம்மையெல்லாம் தன் வலிந்த கூரிய அலகால் கொத்திக் குதறவரும் பிணந்தின்னிக் கழுகைப்போல் படர்ந்து வருகிறது. இதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இப்பொழுது அதைத் தடுத்து நிறுத்த வில்லையானால், பின்னர் அ’து அடித்து விரட்டப்பட வேண்டிய அளவுக்கு வலிவு பெறப்போவதும், நாம் மெலிவு பெறப்போவதும் உறுதி, உறுதி! உறுதி! எனவேதான் இப்பொழுது இந்தியெதிர்ப்புணர்வு போதாது, இந்தித் தடுப்புணர்வு வேண்டும் என்று நாம் முதலில் குறிப் பிட்டோம். இதை நாம் செய்யாதவரை வல்லதிகார இராசீவும், அவரை வணங்கி இயக்கிக் கொண்டிருக்கும் வடநாட்டு முதலாளியப் பார்ப்பனீயக் கூட்டமும், இந்தியை மேன்மேலும் தேசிய இனமக்கள்மேல் குறிப்பாகத் தமிழர்கள்மேல், திணிப்பது மட்டும் அன்று, உடலையே அறுத்து அரத்தத்தோடு அரத்தமாகக் கலக்கும்படி செய்து விடுவார்கள். அத்துணை அளவிலான எத்தர்கள், கொடுங்கோலர்கள், அரக்கர்கள், வல்லதிகாரக் கொடியவர்கள், அவர்கள்! இது, வெறுப்பினால் எழுதப் பெற்ற கருத்தன்று; எதிர்கால உண்மையை உற்றுநோக்கி எழுதப்பெற்ற கூற்றாகும்.