பக்கம்:தமிழின எழுச்சி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

22 - தமிழின எழுச்சி

இவற்றைக் கேட்கவோ, கேட்டுத் தக்க நடவடிக்கைகளை மேற் கொள்ளவோ, அரசினரோ, கல்வித்துறையினரோ முன்வராமை தமிழ் நாட்டில் தமிழ்ப் பயிற்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஒரு சிறிதளவு தானும் ஆக்கமோ ஊக்கமோ அளிக்கப்படவில்லை என்பதாகத்தானே பொருள்படும். இக்கால் இந்தி பயின்று வரும் மாணவர் ஒருசிலர்க்கு மேலே கூறப்பெற்ற கொடுமைகள் நிகழுமாயின், அக் கொடுமைகளின் கடுமையால் தில்லியில் உள்ளவர்கள் குதித்துக் கூத்தாட மாட்டார்களா? அவர்கள் கூத்தாட்டத்தைக் கண்டு இங்குள்ள காமராசுகளும் பக்தவச் சலங்களும் மறு நாளே தடிகளை எடுத்துக்கொண்டு கொடுமை நடந்ததாகக் கூறப்பெற்ற இடத்திற்கு ஒடமாட்டார்களா? தமிழ் வளர்ச்சியில் மட்டும் இத்துணைப் புறக்கணிப்பா?

இவற்றிற்கிடையில் வீடணத் தமிழ் மாணவர் ஒருவரைத் துணையாகக் கொண்டு அவர் பெட்டியில் உள்ள புத்தகம் ஒன்றை அவரையே கிழித்துக் கொள்ளச் செய்து, அக்குற்றத்தைப் பிறர்மேல் சாற்றி, அதன் விளைவாக எழுந்த நடவடிக்கைகளின் முடிவாகப் பதினான்கு தமிழ் மாணவர்களையும் அக் கல்லூரித் தலைவர் வெளியேற்றியதுடன், அவர்தம் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களையும், சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு விடுத்துள்ளார். அம் மாணவர்களில் அறுவர் புலவர் இறுதி யாண்டும், நால்வர் மூன்றாமாண்டும், நால்வர் இரண்டாமாண்டும் பயில்வோராவர். நான்காண்டுகளாக அக்கல்லூரியில் தமிழ்ப் படித்துவந்து. இன்னுஞ் சில மாதங்களில் பட்டம் பெற்றுத் தமிழாசிரியர்களாகப் பல்லாயிரக் கணக்கான சிறுவர்களுக்குத் தமிழ்க் கல்வி கற்பிக்கப்போகும் அவர்களை, அவர்கள்மேல் உள்ள கடுப்பால், அவர்கள் செய்யாத குற்றத்திற்கெனக் கல்லூரியை விட்டு விலக்குவது எத்துணைக் கொடுமையானது? என்பதை அரசினரும், கல்வித்துறை மேலாளர்களும் எண்ணிப்பார்க்க வேண்டுகின்றோம். இவ்வடிப்படையான நிகழ்ச்சிகளில் மாணவர்கள்மேல் எவ்வகைக் குற்றமுமே இருந்திராது என்று கூற நாம் முற்படவில்லை . ஆனால் இவ்வளவு கொடுமையான நிகழ்ச்சிகளுக்கிடையில் வெளியேற்றப் பெறும் அம் மாணவர்களின்மேல் கூறப்பெறும் குற்றங்கள் மெய்தாமா? என்பதைக் கூடத் தீர ஆய்ந்து பாராமல் பார்ப்பன வெறிகொண்ட கல்லூரித் தலைவர் ஒருவரின் முடிவுக்கே அப்பதினான்கு தமிழ் மாணவர்களின் வாம்வை விட்டு விடுவதென்பது எவ்வகையாலும் நெறியாகாது; அறமாகாது என்றே கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இதுபற்றித் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் வந்து உசாவினாரேனும், அந்நேர்முக உசாவலின் முடிவேதும், வெளியேற்றப் பெறும் அம் மாணவர்களுக்கு அறிவிக்கப் பெறவில்லை என்பதே, அந் நடவடிக்கை