பக்கம்:தமிழின எழுச்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

30 • தமிழின எழுச்சி


5. இவ்வாண்டில் தமிழகம் வந்துபோகும் வெளிநாட்டுப் பயணிகளுக்கும், அதிகாரிகளுக்கும், திருவள்ளுவரின் வெளியப் (Nickel) படிமம் ஒன்றும், திருக்குறள் ஒன்றும் அன்பளிப்பாக வழங்குதல்.

6. அஞ்சல் துறையில் இவ்வாண்டு வெளியிடும் எல்லா உறைகளின், அட்டைகளின், உள்நாட்டுறைகளின் மேலும் 'திருவள்ளுவர் ஈராயிரமாண்டு வெளியீடு' என்ற வரியையோ, இக்கருத்தை ஒட்டிய வேறு வரியையோ பொறிக்கச் செய்தல்.

7. இவ்வாண்டு முழுவதும் நடைபெறும் சட்டமன்றக் கூட்டங்கள் எல்லாவற்றின் தொடக்கத்திலும் திருக்குறளின் ஒவ்வோர் அதிகாரத்தைப் படித்துவிட்டே மன்றத்தைத் தொடங்குதல்.

8. இவ்வாண்டு முதலாக அரசு வெளியிடும் அரசினர் செய்தியிதழில் (Gazette) திருவள்ளுவர் ஆண்டைப் பொறிக்கும் வழக்கத்தை மேற்கொள்ளுதல்.

9. இவ்வாண்டு முதல் தமிழ் ஆண்டுப் பிறப்பு சுறவ(தை) மாத முதல்நாள் என அறிவித்தல்.

10. இவ்வாண்டு முழுவதும் மக்களிடையே நடைபெறும் எல்லா வகையான கூட்டங்களின் தொடக்கத்தே, திருக்குறள் அறத்துப்பாலின் ஓர் அதிகாரத்தைப் படித்த பின்பே கூட்டத்தைத் தொடங்குதல் வேண்டும் எனத் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தல்.

11. இவ்வாண்டு வெளியிடப்படும் திரைப்படங்களில் எல்லாம் திருக்குறள் பெயரையோ, வரிகளையோ, கருத்துகளையோ எவ்வகையிலேனும் பயன்படுத்துமாறு படப்பிடிப்பாளர்க்கு வேண்டுகோள் விடுத்தல்.

12. திருவள்ளுவர் ஈராயிரமாண்டு நினைவாக, தமிழில் நடைபெறும் சிறந்த நாளிதழ், கிழமையிதழ், மாதவிதழ், முதலியவற்றைத் துறைதுறையாகப் பகுத்து, அவ்வத்துறையில் சிறந்தனவற்றிற்குத் திருவள்ளுவர் வெள்ளிப் படிமமும் 5000 உருபா பரிசும் வழங்குதல்.

13. திருக்குறள் கருத்துகளை எல்லாவகையிலும் பரப்பப் பெரிகம் முயற்சி செய்தல்.

14. இவ்வாண்டில் பிறக்கும் எல்லா ஆண்குழந்தைகளுக்கும் திருவள்ளுவன் என்றும், எல்லாப் பெண்குழந்தைகளுக்கும்