பக்கம்:தமிழின எழுச்சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 31

முப்பாலிகை என்றும் பெயரிடும்படி அரசு வேண்டுகோள் விடுத்தல்.

15. இவ்வாண்டில் கட்டி முடிக்கப்பெறும் எல்லாப் பள்ளிக்கூடங்களும், பொது அங்காடிகளும், அரசினர் கட்டடங்களும் திருவள்ளுவர் பெயரையே தாங்குதல் வேண்டுமென அறிவித்தல்.

16. இவ்வாண்டு முதல் எல்லாக் கல்லூரிகளிலும், ஆங்கிலத்தில் சேக்சுபியர்போல், தமிழில் திருக்குறளைத் தனிப் பாடமாக வைத்தல்.

17. இவ்வாண்டு முதல் அறமன்றங்களில் திருக்குறளின் மேல் ஆணையிடுவதையும் ஏற்றுக்கொள்ளப் போதிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளல்.

18. அறமன்றங்களில் திருவள்ளுவர் படத்தையும் மாட்டுவித்தல்.

19. திருவள்ளுவர் ஈராயிரமாண்டு நினைவாகச் சிறைக்குற்றவாளி களின் தண்டனைக்காலத்தை ஓரளவு குறைத்தல்.

20. 1330 குறட்பாக்களையும் பொருளுடன் ஒப்பிப்பவரைப் புலவ ரெனப் பாராட்டி, அரசவைப் பெருமையும் வாழ்வூதியமும் தருதல்.

21. வெறும் குறட்பாக்களை மட்டும் ஒப்பிப்பவரைப் பாராட்டிப் பரிசளித்தல்.

22. தமிழக அரசின் இலச்சினையில் உள்ள கோபுரத்தை நீக்கிவிட்டுத் திருவள்ளுவர் உருவத்தையும் ஓலைச்சுவடிகளையும் அரசு முத்திரையாக மாற்றுதல்.

23. திருக்குறள் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவோரைப் பாராட்டிப் பரிசளித்தல்.

24. இவ்வாண்டு முழுவதும் திருவள்ளுவர் விழாக்களையும் பட்டி மன்றங்களையும் ஏற்பாடு செய்வித்தல்.

25. திருச்சி, சென்னை, புதுவை வானொலியில் இவ்வாண்டு முழுவதும் கூறப்பெறும் அருள்வாக்குகளைத் திருக்குறள் கருத்துகளாகவே கூறத்தக்க ஏற்பாடு செய்தல்.

தென்மொழி சுவடி - 6 ஒலை - 10-11, சனவரி 1969