பக்கம்:தமிழின எழுச்சி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 79

புகழ்க் காழ்ப்பாலும், பொறுப்புப் போராட்டத்தாலும் பொறாமைப் புரைகளாலும், தலைமைப் பித்தத்தாலும் நிகழ்வுறும், அவ்வுள் உடைவு நிலைகளைப் பற்றிப் படிப்படியாக இங்கு, ஆய்வோம். முதற்கண் கருத்து வேறுபாடு பிழையன்று. அஃது இயற்கையானதாகும். இனி அஃது இன்றியமையா மது வேண்டும் ஓர் உணர்வு வெளிப்பாடும் ஆகும். கருத்து வேறுபாடே அறிவு மாளிகையின் வளர்ச்சி நிலைப் படிக் கட்டுகள். அவற்றை எந்நிலையிலும் வரவேற்க எவரும் அணியமாயிருத்தல் வேண்டும். ஆனால், கருத்து வேறுபாடு அறிவைப் பொறுத்ததாக இருத்தல் வேண்டுமேயன்றி மனத்தைப் பொறுத்ததாக இருத்தல் கூடாது. ஒரு மரத்தின் வளர்ச்சிக்கு அதனின் சில கிளைகளைத் தறித்த லும், அதற்குச் சில வகை எருக்களை யிடுதலும் பற்றிய வேறுபாடுகளே அறிவு நிலை வேறுபாடுகளானால், அம்மரத்தின் பூக்களையும், காய் கனிகளையும் மாற்றுதற்கான நிலைகளில் போராடுவது மனநிலை வேறுபாடாம். இவ் வேறுபாட்டால் மரச்சிதைவு நேருமேயன்றி மரச் செழிப்பு நேரா தென்க.

ஒரு கொள்கை ஓர் இயக்கமாக அமைந்தபின், அதன் புறநிலை வளர்ச்சி பற்றிய திருத்தங்களே அல்லது மாற்றங்களே, எண்ணப் பெறுதல் வேண்டும். அக் கொள்கையிலேயே மாற்றங் கற்பிப்பது ஒன்றை நிலைநிறுத்துவதாகாது; சிதைப்பதகாவே அமையும். ஒரு கொள்கையைக் கொஞ்ச காலத்திற்குப் பின்பற்றியிருந்து, அதே கொள்கையைப் பின்னர்த், தவறு என்று கூறி, அதனின்று வேறுபட்டு, வேறு கொள்கை ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதனை ஓர் இயக்கமாகச் செய்பவர், தாம் இரண்டாவதாகத் தேர்ந்தெடுத்த அக்கொள்கையையும், இடித்துச் சிதைக்க நெடுங்காலமாகாது. அவர் அதனையும் தவறு என்று கூறி, மூன்றாவதாக ஒரு கொள்கையை நாடமாட்டார் என்பதில் என்ன உறுதி யிருக்கின்றது? எனவே, அவரைப்பொறுத்த அளவில், அவர் அறிவே வளர வேண்டியதாக இருக்கின்றது என்று நாம் கருதிக்கொள்ள வேண்டுமேயன்றி, அவர் கொள்கை மாற்றத்தை அவரின் அறிவு விளக்கமாகக் கொண்டு விடக்கூடாது. அதுவுமன்றி அவர் திட்டவட்டமான ஒரு கருத்தைத் தேர்ந்து கொள்ளவும் திறனற்றவர் என்றும் நாம் கருதிக் கொள்ளலாம்.

மெய்யறிவுக் கோட்பாட்டின்படி எல்லாவகைக் கருத்துகளும் ஒரு கொள்கையின் அடிப்படையிலேயே எழுகின்றன; இயங்குகின்றன. எனவே, ஒவ்வொரு கருத்துக்கும் ஒவ்வொரு வகையான நயன்மை (நியாயம்) உண்டு. திருடனும், கொலையாளனும்கூட தன்தன் செயல்களுக்கு நயன்மை கற்பிக்க முடியும். ஆனாலும் அவை உலகியல் இயக்கப் பொருத்தம் உடையவை என்று கூறமுடியாது. தன் உடன்