பக்கம்:தமிழின எழுச்சி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

78 - தமிழின எழுச்சி


ஒருமுகப்பட்டு, ஒரு முனைப்போடு எழும் ஓர் இயக்கம் இடைமுறிதலும் எழுச்சி நெரிதலும் பெறுவானேன்? என்று எண்ணிப் பார்ப்போமானால், இறுதியில் அங்குத் தந்நலக் கூறுபாடுகளும் பொருள் நசைகளும், பொறாமைப் புகைச்சல்களும், புகழ்ப் புழுக்கங் களும்தாம் எச்சங்ககளாக நிற்கும். இவை ஒரு சிலருக்குத்தாம் உரியவை என்றில்லாமல், அனைவருக்குமே பொதுவான மாந்த அழுகல் உணர்வுகள். ஓர் இயக்கத்தின் கீழ்நிலைத் தொண்டனுக்கு உள்ள இவ்வகை யான உணர்வெழுச்சிகள், ஒரு மேனிலைத் தலைவரையும் ஆட்டிப் படைக்கின்ற சல்லிவேர்களாக அமைந்திருப்பதைப் பார்க்கலாம். இது மாந்த வியற்கை. ஆனாலும் மனவுணர்வுகளும் அறிவுணர்வுகளும் பூத நிலை வெளிப்பாட்டு உணர்வுகளும் பொருள்நிலை இயக்கக் கூறுபாடுகளும் இவை இவை என்று வேறு பிரிக்கத் தெரிந்த மெய்யுணர்வு கைவரப் பெற்ற ஒரு கூறினார்க்கன்றிப், பிறர்க்கு அவற்றின் பிறழ்ச்சி நிலைகளைக் காணுவதும், கண்டு விலகுவதும் இயலாது என்க. “ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே, மெய்யுணர்வில்லா தவர்க்கு”, என்றும், “எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்” என்றும் கூறிய திருவள்ளுவ மந்திர வுண்மைகளும் இதனையே நிலை நிறுத்தும்.

இவ்வியக்க வுறுப்புநிலைகளை ஒவ்வொருவரும் பட்டறிந்தே உணர்தல் இயலும். எத்துணையாய் எடுத்துச் சொல்லினும் ஒருவர் அறிவிற்கு இவை ஏறுதலும், உணர்வில் இவை ஊறுதலும் இயலாது. எனவேதான், இவ்வுலகின்கண் தோற்றுவிக்கப்பெறும் எந்த இயக்கத்திலும், நடைமுறை மாறுபாடுகளும் வேறுபாடுகளும் இடையறாமல் நிகழ்ந்து கொண்டே உள்ளன. தாம் பெறும் பிள்ளைகளே, குழவிப் பருவத்து, அழகும் இனிமையுமா யிருந்து, முகிழ்க்கும் உணர்வுப் பருவத்து, மாறுபட்டும் வேறுபட்டும் போவதும், சிற்சிலகால் தாம் எதிர்பாராதவாறு அறக் கொடுமையாளராய்ப் புறத்திரிபுற்றுப் போதலும், அவை பெற்ற தாயார்க்கே யன்றி மற்றையோர்க்கு விளங்காதன்றோ? இவ்வாறு தன்னுணர்வானதாகிய உயிர்ப் பிறவிகளின் இயக்கங்களே மாறுபாடடையும் பொழுது, பல்வகை உயிர்கள் சேர்ந்து இயங்கும் ஓர் இயக்கம் மாறுபாடுறாது இருக்குமென்று எவரும் எதிர்பார்க்க வியலாது. எனவே, கூடியமட்டில் நம் இயக்கங்களை ஒருவகைக் கட்டறுப்பு நிலைக்குத்தான் வடிவமைக்க முடியும் என்க. அந்தக் கட்டறுப்பு நிலை எவ்வகையில் அமையலாம் என்பது பற்றி இங்கு ஒருவாறு எண்ணிப் பார்ப்போம்.

ஓர் இயக்கம் முதற் சிதைவுறுதற்குக் கருத்து வேறுபாடே முதற் கரணியமாகவுள்ளது. அடுத்தடுத்த சிதைவுகள் பொருள் தடையாலும்,