பக்கம்:தமிழின எழுச்சி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 83

தில் தோன்றும் உயிரெழுச்சிகளே பொருள் நசையால்தான் ஏற்படுகின்றன என்பதை முதற்கண் நாம் அறிதல் வேண்டும். பொருள் நசையில்லாத உயிர்க்கூறுகள் மலர்ச்சியுறுவதே இல்லை. பிறக்கின்ற எல்லா உயிர்களும் பொருளாசை கொண்டே இயங்குகின்றன. இன்னும் சொன்னால் பொருளாசையில்லாத உயிர்கள் பிறவிக்கே வருவதில்லை. “பொருளில்லார்க்கு இவ்வுலக மில்லை” என்னும் குறள் கூற்றில், உயிரெழுச்சிக்குப் பொருள் நசையே அடிப்படை என்னும் உண்மையே சொல்லப் பெறுகின்றது. எனவே பொருள் நசையின்றி ஓருயிரும் இயங்குவதில்லை. இனி, உயிரினத்துள் மாந்தவுயிரே தலையாய அறிவியக்கக் கூறுபாடுகளைக் கொண்டதாகலின், மாந்தப் பிறவியிலும் அப்பொருள் நசை அறிவெழுச்சிக் கூறுபாடுகள் மேனிலை இயக்கச் சிறப்புகளைக் கொண்டதாக இருக்கும். அஃதாவது கீழ்நிலை உயிரான ஒரு விலங்கு, பொருள் நசை நாட்டமே கொண்டு இயங்குமெனில், அதனின்றும் விளங்கித் தோன்றிய ஒரு மாந்த வுயிர்க்கு, அப் பொருள் நாட்டம் அதற்குரிய அறிவு வளர்ச்சிப் படிநிலைகளின் பாற்பட்டே இருக்கும். இனி மாந்த உயிர்களுள்ளும் மிக விளங்கித் தோன்றிய சில உயிர்கள், அதற்கேற்ப மிக வுயர்ந்த அறிவுச் சார்பான இயக்கத்துடனேயே இயங்கும். இனி, அவற்றுள்ளும் பிறவியக்கக் கூறுகள் மிகச்சார்ந்த பொதுநல உணர்வுள்ள மாந்த உயிர்களோ, பொருள் நசையில் முற்றும் அப்பொது வுணர்வினையே அடியொட்டி இயங்கும். இவ்வுண்மையை இன்னும் விளங்கக் கூறினாலொழிய, விளங்கிக் கொள்ளுதல் இயலாது, அதனைப் பருப்பொருளளவின் ஓர் உண்மையால் விளக்குவோம்.

தனிப்பட்ட மாந்தன் ஒருவன் தன் முழுநிலை வாழ்வுக்கு ஓரளவு பொருள் தேவை என்பதை உணர்வதாக வைத்துக்கொள்வோம். அவன் ஆசைக்கேற்பத் தானும் தன் சுற்றமும் வாழ ஒரு விளைநிலமும், ஒரு வள மனையும், இயங்கிகளும், உடல் நலந்தரும் உயர்ந்த உணவு வகைகளும், உயரிய ஆடைகளும் தேவை என்று விரும்பி அவற்றைப் பெறுகின்ற நோக்கத்தையே தன் வாழ்வின் இலக்காகக் கொண்டு, இயங்குவதாகக் கருதிக்கொள்வோம். இவ்வகையில் அவன் கொண்ட அறிவு நிலைகள், அவன் தன் சுற்றத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதிலும், தன் தேவைக்கேற்ற விளைவைத் தருகின்ற விளைநிலத்தை வாங்கு வதிலும், உருவாக்குவதிலும், தன் வாழ்வு நுகர்ச்சிக்கேற்ற வள மனையை அமைப்பதிலும், இயங்கிகள் வாங்குவதிலும், ஊட்டமிக்க உணவு வகைகளிலும், கவர்ச்சிமிக்க ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் இயங்கும். ஆனால் பொதுவுணர்வுச் சார்பியக்கம் மிக விளங்கித் தோன்றும் ஒரு மாந்தனுக்கிருக்கும் பொருள் நசை, இவற்றுக்கு நேர்மாறாக இருக்கும். அவ்வாறான ஒருவனின் பொருள் நசையின் அடிப்படை நோக்கமே மிக வேறுபட்டு விளங்கும். தன்னலவுணர்வு