பக்கம்:தமிழின எழுச்சி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

90 - தமிழின எழுச்சி

எப்பொழுதும் எவரிடத்தும் வாய்திறந்து உரையாடுவதில்லை. தான் காழ்ப்புக் கொண்டவனை ஓர் எதிரியைப் போல் கருதுகிறான். அவனைப் பற்றியே பலரிடமும் பேசுகிறான்; அவனைப் பாராட்டுகின்ற மக்களை அவனுக்குத் துளியும் பிடிப்பதில்லை; அவர்களை அவன் அறவே வெறுக்கின்றான். அவன் தெருவில் நடக்கையிலும், பிறரிடம் பேசுகையிலும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே நடக்கின்றான். மிகவும் மெதுவானகுரலில் ஒரு நோயாளியைப் போலவே பேசுகின்றான். தன் நிலைகளால் நிறைவடையாதவனாக, வெறுப்புற்றவனாகவே நடந்து கொள்கின்றான். இந்நிலையில் அவனிடம் வந்து பேசுகின்ற அவனுக்குச் சார்பானவர்களிடம் தனக்குப் பிடிக்காத அவனுக்கு எதிரிடையான ஓர் இயக்கத்தைத் தோற்றுவிக்கும்படி சொல்லுகிறான். மனவலியற்றவனாகவும், கோழை உணர்வினனாகவும் அவன் இருக்கவேண்டியிருப்பதால், அவனாலேயே ஓர் இயக்கத்தைத் தோற்றுவிக்க முடிவதில்லை.

தனக்கு வேண்டாதவனால் அவனைப் பாராட்டுகின்ற நிலைகளே அவன் உள்ளத்தை என்றென்றும் குடைந்து கொண்டிருக்கும். அவற்றின் அழுத்தத்தினின்று மீள, அவன் எதையாவது எழுதிக்கொண்டோ படித்துக்கொண்டோ அமைதியாக இருப்பான். பிறனின் புகழ்ச்சிநிலைகளைப் பொறுத்துக் கொள்ளாத அவன் உள்ளம் தன்னையும் எவராகிலும் பாராட்டமாட்டார்களா என்று ஏங்கித் தவம் கிடக்கின்றது. அப்படி ஓரிருவரைக் கொண்டு தன்னைப் பாராட்டவும் செய்கிறது. தன் தகுதியை உயர்த்தியும், தான் காழ்ப்புக் கொண்டவனின் தகுதியைத் தாழ்த்தியும் பேசுபவர்களையே தன் உற்ற நண்பர்களாகக் கொள்ளச் சொல்கின்றது, அந்நிலை வளர்கின்றபொழுது கிளையியக்கத் தோற்றம் மலர்ச்சி கொள்கின்றது. நிலைகள் பலவானால் இயக்கங்களும் பலவாகின்றன.

இந்நிலைகள் தமிழகத்தில் அளவிறந்து காணப்பெறுகின்றன. தொடக்கத்தில் தென்மொழியியக்கத்திற்கும் இவ்வுணர்ச்சித் தாக்குதல் கள் இருந்தன. இப்பொழுதும் அளவிறந்து காணப் பெறுகின்றன. அவ்வாறு தென்மொழி வளர்ச்சியில் காழ்ப்புற்றவர்களை வேறு கரணியங்களைச் சொல்லி வேறுவேறு இயக்கக்கூறுகளை அமைத்துக் கொண்டார்கள். இன்றும் அந்த நிலைகள் நீடிக்கின்றன. தென்மொழிக்கு முன்பு துணை நின்ற மூன்று நான்கு பெயர்கள், தங்கள் உள்ளுணர்வுகளுக்கெல்லாம் வேறுவேறு வடிவங்களைக் கொடுத்து, தென்மொழி மேலும் ஆசிரியரின் மேலும் பல பழிகளைச் சுமத்தினர். அவர்களில் ஒருவர் தென்மொழித் தொடர்பாளர் முகவரிகளைக் கண்டுணர்ந்து, அம் முகவரிகளுக்கும், தென்மொழியை அறிந்த