உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தமிழியக்கம்

சொற்கோவின் நற்போற்றித்
    திரு அகவல் செந்தமிழில்
         இருக்கும் போது
கற்கோயில் உட்புறத்தில்
    கால்வைத்த தெவ்வாறு
         சகத்ர நாமம்?
தெற்கோதும் தேவாரம்,
    திருவாய்நன் மொழியான
        தேனி ருக்கச்
செக்காடும் இரைச்சலென
    வேதபா ராயணமேன்
        திருக்கோ யில்பால்? 59

திருப்படியில் நின்றபடி
    செந்தமிழில் பெரும்படியார்
        அருளிச் செய்த
உருப்படியை அப்படியே
    ஊரறியும் படியுரைத்தால்
        படியும் நெஞ்சில்!
தெருப்படியிற் கழுதையெனச்
    செல்லும்படி யாகாத
        வடசொற் கூச்சல்
நெருப்படியை எப்படியோ
    பொறுத்திடினும் நேர்ந்தபடி
        பொருள் கண்டீரோ! 60