உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௬. மாணவர்

கற்கின்ற இருபாலீர்!
    தமிழ்நாட்டின் கண்ணொப்பீர்
        கனியி ருக்க
நிற்கின்ற நெடுமரத்தில்
    காய்கவர நினையாதீர்
        மூது ணர்வால்
முற்கண்ட எவற்றினுக்கும்
    முதலான நந்தமிழை
        இகழ்த லின்றிக்
கற்கண்டாய் நினைத்தின்பம்
    கைக்கொணடு வாழ்ந்திடுவீர்
        நன்றே என்றும். 76

ஆங்கிலத்தைக் கற்கையிலும்
    அயல்மொழியைக் கற்கையிலும்
        எந்த நாளும்
தீங்கனியைச் செந்தமிழைத்
    தென்னாட்டின் பொன்னேட்டை
        உயிராய்க் கொள்வீர்,
ஏங்கவைக்கும் வடமொழியை,
    இந்தியினை எதிர்த்திடுவீர்
        அஞ்ச வேண்டாம்.
தீங்குடைய பார்ப்பனரின்
     ஆயுதங்கள் “இந்தி” “வட
        சொல்“ இரண்டும். 77

பார்ப்பான்பால் படியாதீர் ;
     சொற்குக் கீழ்ப் படியாதீர்
        உம்மை ஏய்க்கப்
பார்ப்பான்; தீ துறப்பார்ப்பான்
     கெடுத்துவிடப் பார்ப்பான் எப்
        போதும் பார்ப்பான்
ஆர்ப்பான் நம் நன்மையிலே
     ஆர்வமிக உள்ளவன்போல்!
        நம்ப வேண்டாம்.
பார்ப்பானின் கையை எதிர்
     பார்ப்பானை யேபார்ப்பான்
         தின்னப் பார்ப்பான். 78