பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தல : நிருக்தத்தில் குறிக்கப்பெறும் வினைப்பொருளுடைய வேர் 'தட்'. இது அடி என்னும் பொருள் உடைய "தாளெட்தி என்னும் பாலிச் சொல்லிலும் உள்ளது. அதர்வ வேதம் ஒர் அடி' என்னும் பொருளுடைய 'தாட' என்னும் சொல்லைப் பெற்றுள்ளது. இந்த சம்ஸ்கிருத 'தட்' என்னும் சொல்லுக்கு ஆரியத்தில் சிறந்த வேர்ச்சொல் ஏதும் இல்லை. மாறாக அடி என்னும் பொருள் உடைய தட்டு (கன்னடம்தமிழ் - தெலுங்கு) என்ற சொல்லும் எதிர்த்து அடி’, என்னும் பொருளுடைய தட்டு என்ற கன்னடச் சொல்லும் 'வடு என்னும் பொருள் தரும் தழும்பு’ என்ற தமிழ்ச் சொல்லும் ஒப்பிட்டு நோக்கற்குரியன. தாரோ: "தாடியைக் குறிக்கும் தாதிக (மனு), தாடி (இந்தி) ஆகிய சொற்கள் தம்விடிட்ர" என்ற வேர்ச்சொல் உடையன என்பதை ஒலியியல் வகையாலோ சொல்லியல் வகை யாலோ எளிதில் விளக்க இயலவில்லை. ஆனால், அச் சொற்கள் தாடைக்குரிய தமிழ்ச்சொற்களாகிய தாள், தாடை, தவடை ஆகியவற்றையும் தவடெ (கன்னடம்) தவடா (தெலுங்கு) ஆகியவற்றையும் நினைவுறுத்துகின்றன. போல்னோ : "பலர் விழை பண்பும் அதனால் உணர்ச்சி விளக்கமார் பண்பும் பெற்றுள்ள சரிநுட்பக் காரணங்களால் பற்றியே அண்மைக் காலத்தில் திராவிடத்திலிருந்து கடன் வாங்கப் பட்ட உரிச்சொற்களும் வினைச் சொற்களும் உன என்று நான் நம்புகிறேன். - 'அவ்வாறு கடன்கொண்ட வேர்ச்சொற்களுள் ஒன்று பேச என்னும் பொருளுடைய போல் என்பதாகும். இச் சொல் திவ்வியாவனத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளது. அதைப் ப்ரு என்னும் வேருடையதென விளக்க யான் தயங்குகிறேன். ஆனால், போல்', என்னும் சொல்லோடு ஒலி என்னும் பொருளுடைய வகுளி (தமிழ்) பகுளு’ பொகளு’ (கன்னடம்) ஆகிய சொற்களையும் பொப்பெ’ (கன்னடம்) பொப்ப’ (தெலுங்கு) ஆகிய சொற்களையுங் கூட ஒப்பிடலாம்.”