பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 கொண்டமையால் அவர் தம் நுண்ணறிவு நூல்கள் பலவாய் வெளியிடப்பட்டன. இதனால் தமக்குப் பெரும் பொருளும் புகழும் சேர்த்துக் கொண்டதோடு தமிழர்க்கு அறிவும் ஆற்றலும் அழியாப் புகழும் ஏற்படப் பெரிதும் ஒரு தமிழாசிரியராக இருந்த அவர், தம் காலத்தில், தம்மால் இயன்ற பணிகளைப் புரிந்த நிறைவு அவருக்கும் நமக்கும் ஏற்புடையதாய் உள்ளது. - - ரா. பி. சே., மு. வ. இருவருக்கும் இருந்த ஒர் ஒற்றுமை தம் கைப்பட மணி மணியான எழுத்துக்களால் நண்பர் கட்குக் கடிதம் எழுதியமை. இதில் மு. வ. வின் கடிதங்கள் பலர் வாழ்வு, சிக்கலுக்குத் தீர்வு காட்டுபவை. ரா. பி. சே. யின் கடிதங்கள் நட்பும் நற்றமிழும் போற்றுபவை. ஒரு பெரும் வேறுபாடு; மு. வ. நண்பர்களிடமும் பெரி தும் பேச்சைச் சுருக்கி எழுத்தை வளர்த்தவர் ரா. பி. சே உரையாடலையே - உரையாற்றலையே &Sశలె)6){L}f & வளர்த்தவர். ரா. பி. சே. மு. வ. இருவரும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதலிரு தமிழ்ப் பேராசிரியர்கள். தமிழை வேறு வேறு வகைகளில் பலர் தமிழாகச் செய்த இரு கண்மணிகள். குறிப்புகள் 1. ம. பொ. சிவஞானம், எனது போராட்டம், இன்ப நிலையம் சென்னை, முதற்பதிப்பு, 1974. 2. சிலம்புச் செல்வர் பற்றி மு. வ. திரு. கிராமணியாரின் பேச்சிலும் எழுத்திலும் எவரைப் பற்றிப் பேசினாலும் குணம், குற்றம் இரண்டையும் சீர்தூக்கிப்பார்க்கும் பண்பு இருப்பது தனிப்பெரும் சிறப்பாகும். தம் கட்சியைச் சார்ந் தோருடைய குற்றங்களைக் குணமாகக் காணுவதும், எதிர்க்கட்சி யினைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் அவருடைய குணங்களை யும் குற்றமாகக் காணுவதுமாகிய அரசியல் மூடநம்பிக்கை திரு. ம. பொ. சியிடம் இருக்கக் கண்டதில்லை. பேச்சிலும் எழுத்திலுமே அன்றித் திரு. கிராமணியாரின் எண்ணத்திலேயே ஒரு தனிப்போக்கு உண்டு. எண்ணத்தில் உள்ள புது வகைத் தெளிவும் எழுச்சியுமே அவருடைய முரசி'லும் மேடை யிலும் ஒலிக்கின்றன. உள்ளத்தில் உண்மைஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும். பழந்தமிழ் இலக்கியத்திலிருந்து எடுத்துக் காட்டுக்கள் கிளம்பும்; அவை பாமரரும் தெரிந்து கொள்ளக் கூடிய வகையில் வடிவுபெறும்.