பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கறைவிடைப் பாலின் நெய்


'செவ்வி கொள்வரகின் செஞ்சுவர்

கலித்த கவ்வை நாற்றின்

கார் இருள் ஓர் இலை'

(குறு.282: 1-2)

(ஒப்பு) Black அறிவாற்றல்,

இரசியம், இரவு, உறக்கம்,

கருப்பை, காதல், சனிக்கோள்,

தவறுக்காக வருந்துதல், நிலைத்த

தன்மை , பெண்மை , மயக்க

நிலை, மறைவு, வடதிசை,

வளமை, வைரம்; அச்சம்,

அதிர்ஷ்டமின்மை , அழிவு,

அறியாமை, இரவு, இருள்,

இறப்பு, இன்மை , எதிர்மறை,

ஒன்றுமில்லாத நிலை, கீழுலகம்,

தண்டனை, தவறு, தீமை, தீய

ஆவி, துயரம், பாவம், மூட

நம்பிக்கை.

கறைவிடைப் பாலின் நெய் Karavitaip

palin ney

(1) மறைவு | புலப்பாடின்மை -

unexposed, hidden, concealed

'கறைவிடைப் பாலின் நெய்யர்

கரும்பினிற் கட்டியாளர்'

(திருநா.தேவா. 1579: 2)

கன்று Kanru (calf)

(1) இரத்தல் - beg

'இரவலர் கன்றாக ஈவார் ஆவாக

விரகிற சுரப்பதாம் வண்மை '

(நாலடி.279: 1-2)

(ஆ) கறவை காண் கன்று

Karavai kan kanru (milch cow and

calf)

(2) விருப்பம் - desire, love

'கறவைகாண் கன்றின் வெஃகிக்

கண்டடி பணிந்து காமர்'

(சீவக. 1125:1)

கன்றை நினைந்து எழு தாய் Kanrai

ninaintu elu tay

(1) அன்பு - love, liking

'கன்றை நினைந்து எழு தாய் என

வந்த கணக்கு அது ஆகாதே'

(திருவா .49:2.5-6)

கனவு



கன்னல் Kannal (water clock)

(1) காலம் - time

'குறுநீர்க் கன்னல் எண்ணுநர்

அல்லது' (அகம்.43: 6)

கன்னன் Kannan (a liberal person /

Karna)

(1) கொடைத்தன்மை - liberality

'கன்னன் வெங்கடேசுரெட்ட

காண்டிபன்மேல் மாமோக'

(தனிப்.781: 1)

கன்னி Kanni (virgin / young woman /

cape comarin)

(1) களவு - conjugal love

'மன்னு மாலை வெண்குடையான்

வளையாச் செங்கோல் அது ஓச்சிக்

கன்னி தன்னைப் புணர்ந்தாலும்

புலவாய் வாழி காவேரி'

(சிலப். 7.3)

(2) அழகு - beautiful

'கட்டுடைக் காவலில் காமர்

கன்னியே' (சீவக.98: 4)

கனகக்குன்று Kanakakkunru (golden

mountain)

(1) செம்மை நிறம், அழகு - red

colour, beautiful |

செங்கனகத் தனிக்குன்றே சிவனே

போற்றி' (திருநா. தேவா.1199:7)

கனல் (fire) பார். 'தீ'

கனல் இரும்பு உண்ட நீர் Kanal

irumpu unta nir (water absorbed

by hot iron)

(1) வெளிப்படாமை, மறைப்பு -

unrevealed, concealed

'கனல் இரும்புண்ட நீரின் விடாது

மனவயின் அடக்கி மறைந்தனன்

ஒழுகி' (பெருங். மகத.25:71-73)

கனவு Kanavu (dream)

(1) மிகு உணர்வு | வேட்கை - extra

sensitiveness / desire

'காதல் கைம்மிகக் கனவின்

அரற்றலும்' (தொல்.1061)


88