பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமர் பூம்பொய்கை வற்றல்


'புண்ணியத் திருக் காமக்

கோட்டத்துப் பொலிய'

(பெரிய 19.71)

காமர் பூம்பொய்கை வற்றல் Kamar

pumpoykai varral

(1) கன்னித்தன்மை நீங்குதல் -

virginity leaves

'கனை இருள் கனவில் கண்டேன்

காமர்பூம் பொய்கை வற்ற

அனையதாம் கன்னி நீரின் தந்த

தாம் நங்கைக்கு என்றாள்'

(சீவக.2075: 3-4)

காய் Kay (vegetable, unripe fruit)

(1) இன்னாச் சொல் - bitter words

'இனிய உளவாக இன்னாத கூறல்

கனி இருப்ப காய் கவர்ந்தற்று'

(குறள். 100)

(2) இளையோர் - youth

'மற்றறிவாம் | நல்வினை

யாம் இளையம் என்னாது

கைத்துண்டாம் போழ்தே கரவாது

அறம்செய்ம்மின் முற்றியிருந்த

கனியொழியத் தீவளியால் நற்காய்

உதிர்தலும் உண்டு' (நாலடி.19)

(3) வலிமை, பாரம் - strong, load /

burden

'வன்காய் பலபல காய்ப்பினும்

இல்லையே தன்காய் பொறுக்கலாக்

கொம்பு' (நாலடி.203: 3-4)

(4) இன்பம்

பெருமரம் புணர்ச்சிப் பல்பூ

இணர்த்தொ 'ைமாட்சி நீரின்

மாண்சினை பல்கிய வேட்கை

என்னும் விழுத்தகு க ஈன்று

நோயி லின்பக் காய் பல

தூங்கியாழ வற்புக்கனி யூழறிந்

தேந்த' (பெருங்.வத்.9:73-77)

(ஆ) கருக்காய் karukkay

(5) இனிமையின்மை - bitter

'துனியும் புலவியும் இல்லாயின்

காம கனியும் கருக்காயும் அற்று'

(குறள். 1306)

(இ) சிதட்டுக்காய் citattukkiy

(6) பயனின்மை – useless


காரம்


'பழமழை பொழிந்தெனப் பதன்

அழிந்து உருகிய சிதட்டுக்காய்

எண்ணின் சில்பெயற் கடைநாள்'

(குறு.261: 1-2)

காயசண்டிகை Kayacantikai (a lady)

(1) பசிப்பிணி

'மாதவன் தன்னால் வல்வினை

உருப்பச் சாவம் பட்டுத் தனித்துயர்

உறூஉம் வீவில் வெம்பசி

வேட்கையொடு திரிதரும்

காயசண்டிகையெனும் காரிகை

தானென்' (மணி.15: 83-86)

காயா Kaya (a flower)

(1) கார்காலம் - rainy season

‘பல் மலர் காயாங் குறுஞ் சினை

கஞல, கார் தொடங்கின்றே காலை'

(நற்.242: 4-5)

(2) கருமை நிறம் - black/ blue colour

'சிறியிலைக் காயா அஞ்சனம்

மலர்' (முல்.93)

(ஆ) காசை Kacai

கருமை - black/ blue colour

காசைசேர் குழலாள் கயல் ஏர்

தடங்கண்ணி காம்பன தோள் கதிர்

மென்முலை'

(திருஞான. தேவா.3678: 1-2)

கார்த்திகை நாள் Karttikai nal (a star)

(1) தொன்மை , நிலைபேறு - ancient,

stable

'வளக்கை மடநல்லார் மாமயிலை

வண்மறுகில் துளக்கில்

கபாலீச்சரத்தான் தொல்

கார்த்திகை நாள்

(திருஞான. தேவா.3578: 1-2)

காரடகு Karataks (leaf)

(1) தாழ்வு - low

'கழுநீருள் காரட கேனும் ஒருவன்

விழுமிதாக் கொள்ளின்

அமிழ்தாம்' (நாலடி.217: 1-2)

காரம் (புண்ணிற்கிடும் காரம்) Karam

(medicine)

(1) வெம்மை – hot