பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதின் தோடு கழலுதல்


காதின் - தோடு கழலுதல் Katin totu

kalalutal

(1) துன்பம் - affliction

'காதின கனகப் பைந்தோடும்

கைவெள் வளைகளும் கழல .. .. ..

வேதனை பெரிதுடைத்து அடிகள்

விளிகவிப் பிறப்பென உரைத்தார்'

(நீலகேசி.73: 1,4)

காந்தம் Kantam (magnet)

(1) ஈர்ப்பு - attract

'செல்லு நான்மறையோன் தன்பின்

திரிமுகக் காந்தஞ் சேர்ந்த

வல்லிரும் பணையு மாபோல்

வள்ளலும் கடிது சென்றான்'

(பெரிய. 1: 5.50)

(2) நிறு

காந்தள் Kantal (a flower)

(1) வெறியாட்டு - spritted dance

'வெறியறி சிறப்பின் வெவ்வாய்

வேலன் வெறியாட்டு அயர்ந்த

காந்தளும்' (தொல்.1006: 1-2)

(2) நறுமணம் - fragrance

'வேங்கையும் காந்தளும் நாறி'

(குறு.84: 4) -

(3) மென்மை - soft

'முளிதயிர் பிசைந்த காந்தள்

மெல்விரல்' (குறு.167: 1)

(4) தண்மை , மாரிக்காலம் - cool, rainy

season

'மழைசேர்ந்து எழுதரு மாரிக்

குன்றத்து அருவி ஆர்ந்த தண்நறுங்

காந்தள முகை அவிழ்ந்து'

(குறு.259: 1-3)

(5) தலைவி - heroine

'நறுந்தண் சிலம்பின் நாறு குலைக்

காந்தள் கொங்கு உண் வண்டின்

பெயர்ந்து புறமாறி, நின்

வன்புடை விறற் கவின் கொண்ட

அன்பிலாளன் வந்தனன், இனியே'

(ஐங்.226: 2-5)

(6) கடவுட்டன்மை - holy, divine

'மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய

கடும் பறைத் தும்பி சூர் நசைத்தா

அய்' (பதி.67: 19-20)

(7) உயர்ச்சி - high

'காந்தள் கடி கமழும், கண் வாங்கு

இருஞ் சிலம்பின்' (கலி, 39: 15)


காமக்கோட்டம்


(8) வழிபாடு - worship

'கொடிச்சியர் கூப்பி வரை தொழு

கை போல் எடுத்த நறவின் குலை

அலங்காந்தள்' (கலி.40: 11-12)

(9) அரிய தன்மை - rare

'திருமணி உமிழ்ந்த நாகம் காந்தட்

கொழுமடற் புதுப்பூ ஊதும் தும்பி'

(அகம்.138: 17-18)

(10) சிவப்பு நிறம்

'காந்தளம் செங்கை யேந்திள

வனமுலை' (மணி.3: 120)

(11) குறிஞ்சித்திணை - mountain tract

'கை விரிந்தன காந்தளும்

பூஞ்சுனை' (சூளா. 17: 1)

(ஆ) கோடல்

கார்காலம்

'மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மா

மழை பொறுத்தல் செல்லாது

இறுத்த வண் பெயல் கார் என்று

அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல

- பிடவமும், கொன்றையும்,

கோடலும் - மடவ ஆகலின்,

மலர்ந்தன பலவே ' (நற்.99: 6-10)

தண்மை

'வெஞ்சின அரவின் பைஅணந்

தன்ன தண்கமழ் கோடல்

தாதுபிணி அவிழ' (அகம்.154:6-7)

நறுமணம்

'தண்கமழ் கோடல் துடுப்பீனக்

காதலர் வந்தார் திகழ்கநின் தோள்'

(திணை .ஐம்.21:3-4)

(12) முல்லைத்திணை

'கொன்றையும் குருந்தும் குலைக்

கோடலும்' (சூளா.18: 1)

காந்தாரம் (பண்) Kantaram (a melody)

(1) இனிமை, களிப்பு - sweetness, joy

'என்னரே யேற்ற

துணைப்பிரிந்தார் ஆற்றென்பார்

அன்னரே யாவரவர்க்கு முன்னரே

வந்தாராம் தேங்கா வருமுல்லை

சேர்தீந்தேன் காந்தாரம் பாடும்

களித்து' (திணைமாலை.106)

காமக்கோட்டம் Kamakkottam (Kaman

temple)

(1) புண்ணியம், அழகு - blessed,

beauty