பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூகை ஒலித்தல்

(ஆ) கூகைக் குலம் ஓடித்திரிதல்

Kikaik kulam btit tirital

(2) அஞ்ஞானம் நீங்குதல் - removing

ignorance

'மேகத்து இடிகுரல் வந்து எழ

வெருவில் வரை இழியும்

கூகைக்குலம் ஓடித்திரி சாரல்

கொடுங்குன்றம்'

(திருஞான. தேவா.2709: 1-2)

கூகை ஒலித்தல் Kukai olittal

(1) வருத்தம், துன்பம், அச்சம், தீமை

- bad omen

'கடவுள் முது மரத்து, உடன் உறை

பழகிய, தேயா வளை வாய், தெண்

கண், கூர் உகிர், வாய்ப் பறை

அசாஅம், வலி முந்து கூகை! .. ..

.. .. அஞ்சு வரக் கடுங் குரல்

பயிற்றாதீமே' (நற்.83: 2-4, 10)

(2) இறப்பு

'பாறுப்படப் பறைந்த பல்மாறு

மருங்கின் வேறுபடு குரல

வெவ்வாய்க் கூகையொடு, பிணம்

தின் குறு நரி நிணம் திகழ் பல்ல'

(புறம்.359: 1-3)

(ஆ) கூகை_பகற்பொழுதில்

குழறல் Kukai pakarpolutil kularal

(3) பாழ்நிலை

'உணவு இல் வறுங்கூட்டு

உள்ளகத்து இருந்து, வளைவாய்க்

கூகை நன்பகல் குழறவும்;

அருங்கடி வரைப்பின் ஊர் கவின்

அழிய பெரும்பாழ் செய்தும்

அமையான்' (பட்.267-270)

(4) தீமை, அழிவு, இறப்பு

'அஞ்சத் தக்க குரலினால் கூகைக்

கோயில் பகல் குழற' (சீவக.2173:

4-5)

(இ) குராலின் குரல் Kuralin kural

(5) இறப்பு, தீமை, துன்பம்

'புலவூண் பொருந்திய குராலின்

குரலும் .. .. .. இன்னா

இசையொலி என்று நின்றறாது'

(மணி.6: 76,79)

(ஈ) குரால் இசைத்தல் Kural

icaittal


கூகை ஒலித்தல்

(6) அச்சம், துன்பம்

'பராரை வேம்பின் படுசினை

இருந்த குராஅற் கூகையும் இராஅ

இசைக்கும்' (நற்.218: 7-8)

(உ) குரால் ஒலித்தல் Kural olittal

(7) தீமை

'என்னை மார்பில் புண்ணும்

வெய்ய; .. .. .. .. அஞ்சுவரு

குராஅல் குரலும் தூற்றும்'

(புறம்.280: 1-5)

(ஊ) குடிஞை ஒலித்தல் Kutirai

olittal

(8) மகிழ்ச்சி

‘மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும்

துறுகல் அடுக்கத்ததுவே' -

(ஐங்.291: 1-2) (9) இரவு

'ஆரிடை உழந்த மாதரை நோக்கிக்

கொடுவரி மறுகும் குடிஞை

கூப்பிடும் இடிதரும் உளியமும்

இனையா தேகெனத் தொடிவளைச்

செங்கை தோளிற் காட்டி'

(சிலப். 13: 30-33)

(எ) ஆண்டலைக் குரல் Antalaik

kural)

(10) துன்பம், தீமை, இறப்பு

'ஊண்டலைத் தூற்றிய

ஆண்ட லைக் குரலும் .. .. .. ..

இன்னா இசையொலி என்று

நின்றறாது' (மணி.6: 77,79)

(ஏ) {{u|கூகை குழறல்}} Kukai kularal

அச்சம்

'குண்டு கண்ணின பேய்களும்

கூகையும் குழறிக் கண்ட

மாந்தர்தம் மனங்களைக் கலமலக்

குறுக்கும்' (நீலகேசி.28: 3-4)

(ஒப்பு) Owl அறிவு, இரவு,

எச்சரிக்கை நிலை, குளிர்காலம்,

முன்னறிவிப்பு, விழிப்பு நிலை;

அறியாமை, இருள், இறப்பு,

உயர் பண்பற்ற தன்மை ,

எண்ணக்குலைவு, கவலை, செயல்

குலைவு, தனிமை, தீமை, துயரம்,

நம்பிக்கை இழப்பு, மன முறிவு.


112