பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொடி


வைத்துப் பொரிமுகந்து அட்டக்

கனாக் கண்டேன்' (நாலா.564)

கொடி Koti

(1) சிறப்பு - renown

'கொடிநிலை, கந்தழி, வள்ளி

என்ற வடுநீங்கு சிறப்பின்

முதலன மூன்றும் கடவுள்

வாழ்த்தொடு கண்ணிய வருமே'

(தொல்.1034)

(2) உயர்வு - eminence

'ஏந்து கோட்டு யானை இசை

வெங் கிள்ளி வம்பு அணி உயர்

கொடி அம்பர் சூழ்ந்த' (நற்.141:9-

10)

(3) வெற்றி - victory

'... .. .. .. .. செற்றார் வெல்கொடி

அரணம் முருக்கிய' (ஐங்.429:2-3)

(4) அசைவு - move, sway

'கடும் பரி நெடுந் தேர் மீமிசை

நுடங்கு கொடி' (பதி.80: 14)

(5) போர் அறிவிப்பு - announcing

war

'செருப் புகன்று எடுத்த சேண்

உயர் நெடுங் கொடி'

(திருமுரு. 67)

(6) புகழ், வெற்றி - fame, victory

'புலவுப் படக் கொன்று, மிடை

தோல் ஓட்டி, புகழ் செய்து எடுத்த

விறல் சால் நன் கொடி'

(மதுரை.370-371)

(7) போர் - war

'போர்க்கொடித் தானைப்

பொருபுனல் நீர்நாடன்'

(களவழி.17: 4)|

(8) வீரம் - valour

'வேறு வேறு இயற்றி வீரக்

கொடியையும் அறுத்து வீழ்த்தி'

(கம்ப.யுத்.2060: 3)

(ஆ) யானைக்கொடி Yanaikkoti

(9) வலிமை - strength

'நின்னொன்று உயர்கொடி

யானை ' (பரி.4: 40)

(இ) ஏற்றுக்கொடி Errukkoti

(10) சிவன்

ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த

சீர் கெழு கொடியும் அவ் ஏறு

என்ப ' (புறம்.கட வா.3-4)

கொடி


(ஈ) கோழிக் கொடி Kolik koti

(11) வெற்றி

'கோழி ஓங்கிய வென்று அடு

விறற் கொடி வாழிய பெரிது'

(திருமுரு.38-39)

(உ) பதாகை அற்று வீழ்தல்

patakai aru viltal (fall of banner)

(12) தோல்வி - failure, defeat

பொடியுடைக் கானம் எங்கும்

குருதிநீர் பொங்க வீழ்ந்த

தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த்

தாடகை தலைகள் தோறும்

முடியுடை அரக்கற்கு அந்நாள்

முந்தி உற்பாதம் ஆக படியிடை

அற்று வீழ்ந்த வெற்றி அம்

பதாகை ஒத்தாள்'

(கம்ப பால.1213)

(ஊ) கொடியை அறுத்து

வீழ்த்துதல் Kotiyai aruttu vilttutal

(cutting a flag)

(13) வெற்றி

'வேறு வேறு இயற்றி வீரக்

கொடியையும் அறுத்து வீழ்த்தி'

(கம்ப.யுத்.2060:3)

(எ) கொடி அற்று நிலத்தில்

வீழ்தல் Koti arru nilattil viltal (flag

falling on ground)

(14) தீமை, தடை, இறப்பு

obstruction

'சக்கர நெடுங்கொடி அற்றனவாகி

இருநில மருங்கில் சிதைவன

வீழவும்' (பெருங் மகத.27: 77-78)

(ஏ) துகிலிகைக் கொடி tukilitaik

koti

(15) அழகு

'துகிலிகைக் கொடியனார்

மின்னிற் தோன்றவும்' (சூளா.41:

(3)

(ஐ) பாம்புக்கொடி Pampukkoti

(16) துரியோதனன்

'புள்ளிருக்கும் தார் மார்பன்

பூம்புகார் வாழ் களியேம்

சுள்ளிருக்கும் கள்ளை உண்டு

சோர்விலேம் உள்ளபடி


119