பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுடர்


(ள) கதிரவனைப் பரிவேடம்

சூழ்தல் Katiravanaip parivetam cultal

(39) தீமை, இறப்பு, அழிவு - bad

omen

'பருதி வானவன் ஊர்

வளைப்புண்டது பாராய்'

(கம்ப.ஆரண்.429: 2)

(ற) சூரியன் தோன்றுதல் Curiyan

tonrutal

துயிலுணர்தல் - wake

'மின்னும் பூணும் மிளிர் கதிர்

ஆரமும் பொன்னும் பூத்ததொர்

கற்பகப் பூமரம் அன்ன காளை

அமர்துயில் தேறினான் மன்னும்

வெஞ்சுடர் மாக்கல் இவர்ந்ததே'

(சீவக.1716)

(ன) ஞாயிறு தோன்றுதல் Nayinu

tonrutal

(40) பிறப்பு - birth

'இளவள ஞாயிறு தோன்றிய

தென்ன நீயோ தோன்றினை

நின்னடி பணிந்தேன்' (மணி.10:

11-12)

(i) ஏழ்பரித் தேரோன் கடல்

புகுதல் Elparit teron katal pukutal

(41) தேடுதல் - search

'நாட்டு நல்லிசை நாவலூரன்

சிந்தை வேட்ட மின்னிடை

இன்னமுதத்தினைக் காட்டு

வன்கடலைக் கடைந்து என்ப

போல் பூட்டும் ஏழ்பரித் தேரோன்

கடல்புக' (பெரிய 303)

(ii) விரிகதிர்ச் _செல்வன்

தோன்றுதல் Virikatirc celvan

(42) பிறப்பு - birth

'விரிகதிர்ச் செல்வன் தோன்றின

னென்ன ஈரெண்ணூற்றோடு

ஈரெட்டாண்டில் பேரறிவாளர்

தோன்றும் அதற்பிற்பாடு'

(மணி.12: 76-78)

(ஒப்பு) Sun அதிர்ஷ்டம்,

அரசாட்சி, அறிவுத்திறம்,

அறிவாளி, ஆற்றல்,

ஆரோக்கியம், ஆளுமை, இரத்த


சுடுநாராசம் செவிசெறித்தல்


சுழற்சி, இயக்கம், இயற்கை ,

உடலியல் வளர்ச்சி, உண்மை ,

உரிமை, ஒளி, கடவுள், கிரகணம்,

கிழமை, சிறந்த நாடோடி, சீர்மை,

சுறுசுறுப்பு, செல்வாக்கு,

சொர்க்கம், தந்தை, தனித்தன்மை,

தனித்த ஆய்வுப்பயணம்

செய்பவர், தியாகம்,

தூய்மைப்பாடு, நடுநிலைமை,

நன்மை, நிலைபேறு, நீடிப்பாற்றல்,

நீதிபதி, நேர்மை , பரிசு,

பாதுகாப்பு, புகழ், பெருமை,

மகிழ்ச்சி, மறுபிறப்பு, மனிதனின்

முழுமைநிலை, மாறி மாறி வரும்

வாழ்வு, மீட்பு, முக்கியத்துவம்,

மெய்யுணர்வு, மேன்மை, வளம்,

வாழ்வு, வானுலக வலிமை,

விண்ணுலகம், விவேகம்,

விழிப்புணர்வு, வீடுபேறு, வெற்றி;

ஆதிக்கம், கிரகணம், குறுகிய

வாழ்க்கை, கொடுந்துன்பம்,

சாதகமற்ற நோக்கு, தன்னல

முனைப்பு, நாடோடி, பாவம்,

வறட்சி, வெப்பம்;

சூரிய உதயம் - ஆட்சியாளரின்

நேர்மை, குழந்தைப்பருவம்,

தியாகம், புதிய ஆரம்பம்;

சூரியன் மறைவு - இறப்பு,

உணர்வு வயப்பட்ட துன்பம்,

முதுமை, வாழ்வின் இருண்ட

பகுதியின் தொடக்கம்.

சுடர் Cutar (flame)

(1) தூய்மை - purity

'கடுக்கி ஒருவன் கடுங்குறளை பேசி

மயக்கி விடினும்

மனப்பிரிப்பொன்று இன்றித்

துளக்கம் இலாதவர் தூய மனத்தார்

விளக்கினுள் ஒண்சுடரே போன்று'

(நாலடி.189)

சுடுநாராசம் செவிசெறித்தல்

Cutunaracam Cevicerittal (insert

hot iron in the ear)

(1) துன்பம் - pain

'மானம் இல்லை மற்றவன்

மாட்டென உவந்த ஒள்ளிழை

உள்ள நோக்கி நிகழ்ந்தது

இற்றென நெருப்பு நுனையுறீ இச்


134