பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சூரிய குண்டம்

சூரிய குண்டம் Curiyakuntam (a pond)

(1) மீயாற்றல், கடவுட்டன்மை -

supernatural, divine

'சோமகுண்டம் சூரிய குண்டம்

துறை மூழ்கிக் காமவேள்

கோட்டம் தொழுதார் கணவரொடு

தாம் இன்புறுவர் உலகத்துத்

தையலார்' (சிலப்.9: 59-61)

சூளாமணி Culamani

(1) உயர்வு, சிறப்பு - lofty, special

'மஞ்சு சூழ் மலைக்கோர் சூளா

மணியெனக் கருது மன்னா '

(சூளா .329: 4)

செங்கோட்டியாழ் 'Ceikottiyal (a lyre)

(1) நன்மை - goodness

'பாடும் பாணரிற் பாங்குறச்

சேர்ந்து செந்திறம் புரிந்த

செங்கோட்டி யாழின்' (சிலப்.334:

105-106)

செச்சை மலர் Ceccai malar

(1) சிவப்பு நிறம்

செச்சை மலர் புரைமேனியன்

திருப்பெருந்துறை உறைவான்'

(திருவா.34: 9.3)

செம்பியன் Cempiyan (a monarch)

(1) ஈரம் | இரக்கம் - compassion

'புள் உறு புன்கண் தீர்த்த, வெள்

வேல், சினம் கெழு தானை,

செம்பியன் மருக!' (புறம்.37: 5-6)

(2) வள்ளன்மை, ஈகை

'புறவின் அல்லல் சொல்லிய

கறையடி யானை வன்மருப்பு

எறிந்த வெண்கடைக் கோல்நிறை

துலாம் புக்கோன் மருக ஈதல்நின்

புகழும் அன்றே ' (புறம்.39: 1-4)

செம்பு Cempu (copper)

(1) சிவப்பு நிறம்

'செம்பு காட்டிய கண் இணை பால்

எனத் தெளிந்தீர்'

(கம்ப.ஆரண்.504: 1)

செம்பொறி ஆகம் Cempori Akam

(1) அழகு


செல்வம்


'அம் பகட்டு எழிலிய செம் பொறி

ஆகத்து' (புறம்.68: 5) --

(2) மாண்பு, மாட்சி

'புகன்ற மாண் பொறிப் பொலிந்த

சாந்தமொடு' (பதி.88:30)

செம்மூதாய் Cemmutay

(1) அழகு

'அணி மிகு கானத்து அகன் புறம்

பரந்த கடுஞ் செம்மூதாய் கண்டும்,

கொண்டும்' (நற்.362: 4-5)

(ஆ) கோவம் Kovam

(2) சிவப்பு நிறம்

'... .. .. .. தீம்பெயற் காரும்

ஆர்கலி தலையின்று தேரும்

ஓவத்தன்ன கோவச் செந் நிலம்'

(அகம்.54: 2-4)

செயலை Ceyalai (a tree)

(1) அழகு

'மணி கெழு நெடு வரை அணி

பெற நிவந்த செயலை அம் தளிர்

அன்ன ' (நற்.244: 9-10)

செருந்தி Cerunti (a flower)

(1) நறுமணம்

'எக்கர் ஞாழல் செருந்தியொடு

கமழ' (ஐங். 141: 1)

(2) தண்மை

'நனைத்த செருந்திப் போதுவாய்

அவிழ, மாலை மணி இதழ் கூம்ப,

காலைக் கள்நாறு காவியொடு

தண்ணென மலரும்' (அகம்.150: 9-

11)

செருப்பிடை பரல் Ceruppitai paral

(1) துன்பம் - affliction

'செருப்பிடைச் சிறு பரல்

அன்னன்' (புறம்.257: 1)

செல்வம் Celvam (wealth)

(1) நிலையாமை - transient

'அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள்

ஊட்ட மறுசிகை நீக்கி

உண்டாரும் வறிஞராய்ச்

சென்றிரப்பர் ஓரிடத்துக்


136