பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தகரம்

ஆட்டுக்குட்டி - - அறியாமை,

அமைதி, இனிமை, எளிதில்

வசப்படுத்தக்க நிலை, குறும்பு,

தன்னடக்கம், தியாகம், தூய்மை,

பணிவு, மன்னிக்கும் மனநிலை.

பலியாடு - கண்டனம், தண்டனை,

பாவ நிராகரிப்பு.

தகரம் Takaram (வாசனைப்பொருள்)

(1) நறுமணம், இன்பம்

'தகர நாறிருஞ் சோலைச்

சயம்பூறான்' (சூளா, 1810: 1)

தண்டு Tantu (rod)

(1) ஆதரவு - support

'இடையன் .......

தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை

மடி விளி' (நற்.142: 4,6)

(ஆ) கதை, சக்கரம், வாள், வில்

போன்ற போர்க்கருவிகள் தாமே

போர் செய்தல் Katai, cakkaram, val,

vil ponra porkkaruvikal tamé por ceytal

(2) அழிவு, தீமை – evil omen

'தண்டோடுதிகிரி வாள் தனு

என்று இன்னை மண்ட அமர்

புரியுமால் ஆழி மாறு உற'

(கம்ப.சுந்.375:3-4)

தண்ணம் Tannam

(1) இறப்பு

'இழைத்தநாள் எல்லை இகவா

பிழைத்தொரீஇக் கூற்றம்

குதித்துய்ந்தார் ஈங்கில்லை ஆற்றப்

பெரும்பொருள் வைத்தீர்

வழங்குமின் நாளைத் தழி இம்

தண்ணம் படும்' (நாலடி.6)

தந்தை tantai (father)

(1) மேன்மை - Superiority, excellence

'.. .. .. மேதக்க தந்தை

யெனப்படுவான் தன்னுவாத்தி

தாயென்பாள் முந்துதான் செய்த

வினை ' (நான். 45:2-4)

தமனகம் (மருக்கொழுந்து) Tamanakam

(1) பச்சை நிறம்


தயிர்

'பச்சைத் தமனகத்தோடு பாதிரிப்

பூச் சூட்ட வாராய்' (நாலா.184: 7-

8)

தமிழ் Tamil)

(1) நன்மை - goodness

இரு பாற்படுக்கும் நின் வாள்வாய்

ஒழித்ததை அதூஉம் சாலும் நல்

தமிழ் முழுது அறிதல்'

(புறம். 50:9-10)

(2) நிலைபேறு - stable, everlasting

'தமிழ் நிலைபெற்ற, தாங்கு அரு

மரபின்' (சிறுபா. 66)

(3) ஈடிலா இனிமை -- unmatched

sweetness

'முனிந்தார் முனிவொழியச்

செய்யுட்கண் முத்துக் கனிந்தார்

களவியற் கொள்கைக் கணிந்தார்

இணைமாலை ஈடிலா இன் தமிழால்

யாத்த திணைமாலை கைவரத்

தேர்ந்து'

(திணைமாலை பாயிரம். 154)

(4) வளமை - flourishing

'வண் தமிழைத் தேர்ந்த வழுதி

கலியாணத்து' (தனிப்.69: 1)

தயரதன் Tayaratan (a king)

(1) கொடை, வள்ளன்மை

'தருகை நீண்ட தயரதன் தான் தரும்

இரு கை வேழத்து இராகவன் தன்

கதை' (கம்ப.பால. 1: 1-2)

தயிர் Tayir (curd)

(1) இனிமை

'தீம் தயிர் கடைந்த திரள் கால்

மத்தம்' (அகம். 87:1)

(2) வெண்மை

'வேளை வெண்பூ வெண் தயிர்

கொளீஇ ' (புறம். 215:3)

(3) தண்மை

'தாழி தரை ஆக தண் தயிர் நீர்

ஆக' (கம்ப.ஆரண்.100: 5)

(4) நிற்றல்

'உருவப் பிழம்பப் பொருளென்

றுரைப்பனிப் பால் தயிர் மோர்

பருவத்தினாம் பரியாயப்

பெயரென்பன் பாலழிந்து

தருவித்து உரைத்த தயிர் உருவாய்

மும்மைத் தன்மையதாம்

திருவத்ததென் பொருளாதலைத்


143