பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தருப்பை

தேர தெளியிதென்றாள்'

(நீலகேசி.387)

(ஆ) மத்தார் தயிர் Mattar tayir

(5) சஞ்சலம், அசைவு

'மத்தார் தயிர்போல் மறுகும் என்

சிந்தை ' (திருநா. தேவா.867: 2)

(இ) மத்துறு தயிர் Mattaru tayir

(6) கலங்குதல், மறுகுதல்

'மத்துறு தயிரின் உள்ளம்

மறுகினன் மயங்குகின்றான்'

(கம்ப யுத்.2151: 2)

தருப்பை Taruppai (a grass)

(1) தூய்மை

'தாழை முழத்து தருப்பை வேய்ந்த'

(பெரும். 264)

(2) புனிதம் - holy

'உய்த்தபோது தருப்பையில் ஒண்

பதம் வைத்த வேதிகைச் செய்தி

மனக்கொள்வாள்' (கம்ப.சுந்.352: 3-

4)

(ஆ) தீர்த்தப்புல் Tirttappul

தூய்மை

'வெஞ்சுடர் வீரன் நெஞ்சுமுதல்

நீவித் தென்மருங்கு மடுத்த

தீர்த்தப் புன்மிசை மென்மருங்கு

எழிலியை மெல்லென நடாஅய்'

(பெருங். இலா.3: 115-117)

தருமணல் பரப்புதல் Tarumanal

parapputal)

(1) திருமணம், எழில், வளம்

'தருமணல் தாழப்பெய்து, இல்

பூவல் ஊட்டி எருமைப்

பெடையோடு, எமர் ஈங்கயரும்

பெரு மணம் எல்லாம் தனித்தே

ஒழிய' (கலி, 114:12-14)

(2) புதுமை

'வரைப்பில் மணல் தாழப் பெய்து,

திரைப்பில் வதுவையும் ஈங்கே

அயர்ப' (கலி. 115:19-20)

தருமன் Taruman (a king)


தலை மழித்தல்


(1) அருள் / இரக்கம், கொடை -

grace / sympathy, benevolence

'தருமன் தண்ணளியால் தனது

ஈகையால்' (சீவக. 160: 1) - -

தலை Talai (head)

(1) தலைவன்

'அரு நிலை உயர் தெய்வத்து

அணங்கு சால் தலை காக்கும்

உருமுச் சூழ் சேண் சீமை'

(பரி. 9:2-3)

(2) முதல் - main

‘விரி கதிர் மதியமொடு, வியல்

விசும்பு, புணர்ப்ப எரிசடை எழில்

வேழம், தலையெனக் கீழ் இருந்து'

(பரி. 11:1-2)

(3) தலைமை

'அறம் தலைப்பிரியா ஆறும் மற்று

அதுவே' (கலி. 9:24)

(4) சிறப்பு

'தீது இல் யாக்கையொடு மாய்தல்

தவத் தலையே' (புறம். 214:14)

(5) தொடக்கம்

மலைத் தலைய கடற்காவிரி' (பட்,

6)

(6) உயர்வு

‘நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம்,

கொலை அஞ்சிக் கொல்லாமை

சூழ்வான், தலை' (குறள். 325)

(ஒப்பு) Head அறிவு நுட்பம்,

ஆண்மை , ஆற்றல், ஆன்மீக

வாழ்வு, உரிமை, எண்ணங்கள்,

ஒளி, சூரியன், தலைமை,

தனித்தன்மை, தியாகம், தீமையை

அழித்தல், மேடராசி, வளமை.

தலை மழித்தல் Talai malittal

(1) துறவு

'மழிக்கு மாறுந் தலைகளை

மையிட்டு ' (நீலகேசி.238: 3)

(ஆ) தலையைச் சிரைத்தல்

Talaiyaic ciraittal

(2) அவமானம், தண்டனை

dishonour, punishment

செருக்கு உற்றான் வீரம் சிதையத்

தலையைச் சிரைத்திட்டான்


144