பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொடி


தொடி Toti (armlet)

(1) பெண் - women

'வில்லோன் காலன கழலே;

தொடியோள் மெல்லடி மேலவும்

சிலம்பே ' (குறு. 7:1-2)

(2) வெற்றி

'வென்றி ஆடிய தொடித் தோல்

மீகை ' (பதி. 40:12)

(3) அழகு, பொலிவு - radiance

'ஐ இரு தலையின் அரக்கர்

கோமான் தொடிப்பொலி

தடக்கையின் கீழ்புகுத்து'

(கலி, 38:3-4)

(ஆ) தொடி செறிதல் Toti cerital

(armlet tightening)

(4) மகிழ்ச்சி - happiness

தொடி செறி யாப்பு அமை

அரிமுன்கை' (கலி. 54:3)

(இ) தொடி நீக்குதல் Toti nikkutal

(remove armlet)

(5) இழப்பு | அமங்கலம் | விதவை

- loss / inauspicious / widowhood

'கூந்தல் கொய்து, குறுந் தொடி

நீக்கி, அல்லி உணவின்

மனைவியொடு' (புறம். 250:4-5)

(ஈ) தொடி நெகிழ்தல் Toti nekiltal

(loosen)

(6) துன்பம், பிரிவு - woe, seperation

'கோதை மயங்கினும், குறுந் தொடி

நெகிழினும், காழ் பெயல் அல்குல்

காசு முறை திரியினும், மாண்

நலம் கையறக் கலுழும் என் மாயக்

குறுமகள் மலர் ஏர் கண்ணே ?'

(நற். 66:8-11)

(உ) கைவளை Kaivalai

(7) இன்பம் / மங்கலம்' - joy /

anspicious

'கார்எதிர் தண்புன்ம் காணின்,

கைவளை, நீர்திகழ் சிலம்பின்

ஒராங்கு விரிந்த வெண்கூதாளத்து

அம்தூம்பு புதுமலர் ஆர்கழல்பு

உகுவ போல சோர்குவ அல்ல

என்பர்கொல் - நமரே?'

(குறு. 282:4-8)


தொடி


(ஊ) வளை Valai

(8) உரிமை - right

'காவிரி வைப்பின் போஒர் அன்ன,

என் செறிவளை உடைத்தலோ

இலெனே' (அகம். 186:16-17)

(9) அழகு, ஒளி - dazzling, beautiful

'வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த'

(அகம். 267:16).

(10) வெற்றி - victory

'இகலின் வலியாரை எள்ளி

எளியார் இகலின் எதிர்நிற்றல்

ஏதம் - அகலப்போய் என்செய்தே

யாயினும் உய்ந்தீக சாவாதான்

முன்கை வளையுந் தொடும்'

(பழமொழி. 293)

(எ) வளை நெகிழ்தல் Valai nekiltal

(loosing bangles)

(11) துன்பம் - sorrow

'எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு

அல்லல் உறீஇ' (நற். 263:2)

(12) பிரிவு - seperation

'இறை வரை நில்லா வளையும்'

(நற். 263:2)

(13) தனிமை - loneliness

'இலங்கு வளை நெகிழ, சாஅய்ப்

புலம்பு அணிந்தன்று' (குறு. 50:4-5)

(ஏ) வளை செறிதல் Valai cerital

(bangles tighten)

(14) இன்பம் - pleasure

'பொய்கை ஊரன் கேண்மை செய்து

இன்புற்றனெம்; செறிந்தன

வளையே' (குறு. 61:5-6)

(15)நன்மை , எதிர்பார்ப்பு - good omen,

expectation |

'சுரிவளைப் பொலிந்த தோளும்

செற்றும்; வருவர்கொல் வாழி -

தோழி!' (குறு. 260:3-4)

(ஐ) வளை உடைத்தல் Valai

utaittal (bangles break)

(16) உரிமை - right

'காவிரி வைப்பிற் போஒர்

அன்னஎன் -- செறிவளை

உடைத்தலோ இலனே'

(அகம். 186:16-17)

(ஓ) வளை கழலுதல் Valai kalalutal


169