பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெல்லி


நெல்லி Nelli (goose-berry)

(1) புளிப்பு - sour taste

'நெல்லி அம் புளிச்சுவை' (நற்.87: 4)

(2) பசுமை - greenish

‘பைங் காய் நெல்லி பல உடன்

மிசைந்து' (ஐங்.381:1)

(3) இனிமை - sweet -

'அத்த நெல்லித் தீஞ் சுவைத்

திரள் காய்' (அகம்.241: 13)

(4) இறவாமை | நீண்ட வாழ்நாள் -

long life / deathless

'செல் உயிர் நிறுத்த சுவைக் காய்

நெல்லி' (அகம்.271:7)

(5) இனிமை, அருமை - sweet, rare,

priceless

'சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக்

கனியே' (சுந் தேவா,1009: 1)

(6) தூய்மை - pure

'காய்ச்சின நீரொடு நெல்லி

கடாரத்தில் பூரித்து வைத்தேன்

வாய்த்த புகழ் மணிவண்ணா

மஞ்சனம் ஆட நீ வாராய்'

(நாலா. 154: 5-8) -

(ஆ) கைந்நெல்லிக்கனி

Kainnellikkani)

(7) எளிமை - easy, simple

'கயற் கடல் சூழ் உலகு எல்லாம்

கைந்நெல்லிக்கனி ஆக்கி'

(கம்ப.பால.595: 1)

(இ) கையுறை நெல்லி Kayurai

nelli

(8) தெளிவு - clear

பொய்யுரை செய்யான் புள்ளரசு

என்றே புகலுற்றார் கையுறை

நெல்லித் தன்மையின் எல்லாம்

கரை கண்டாம்' (கம்ப.கிட்.1002: 1-

2)

(ஈ) கையில் ஆமலகக் கனி Kayil

amalakak kani

பெறற்கு எளிமை - easy to get

'செய்ய மேனியன் தேனொடு

பால்தயிர் நெய்யது ஆடிய நீலக்

குடிஅரன் மையலாய் மறவா

மனத்தார்க்கெலாம் கையில்

ஆமலகக் கனி - ஒக்குமே'

(திருநா.தேவா. 1848)


பகன்றை


(உ) தடக்கையில் நெல்லிக்கனி

Tatakkaiyil nellikkani

எளிமை - easy, simple

'தடக்கையில் நெல்லிக்கனி எனக்கு

ஆயினன்' (திருவா.3: 162)

நொச்சி Nocci (a plant)

(1) போர் - war

'உழிஞையைத் துடைக்க நொச்சி

உச்சியில் கொண்டது உன் ஊர்'

(கம்ப.யுத்.898: 4)

நொய் Noy

(1) நுண்மை

'நொய்யவர் விழுமி யாரும் நூலின்

நுண் நெறியைக் காட்டும்'

(திருநா.தேவா.570: 1-2)

பகல் Pakal (day time)

(1) இன்பம், புணர்வு

'இன்பமும் இடும்பையும்,

புணர்வும் பிரிவும், நன் பகல்

அமையமும் இரவும் போல'

(அகம்.327: 1-2)

பகலில் விண்மீன் வீழ்தல் Pakalil

vinmin vilutal

(1) தீமை, அழிவு

'இரவு வில்லிடும் பகல் மீன்

விழும்' (சிலப்.20: 12)

பகவதியார் Pakavatiyar

(1) கற்பு

பொற்புடைய பகவதியார்

எனப்போற்றும் பெயருடையார்

கற்பு மேம்படு சிறப்பால்

கணவனார் கருத்தமைந்தார்'

(பெரிய, 1919: 5-8)

பகன்றை Pakanrai (a creeper)

(1) பனிக்காலம் - dew season

'பாண்டில் ஒப்பின் பகன்றை

மலரும் கடும் பனி அற்சிரம்'

(நற்.86:3-4)

188