பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படம்புடைத்திருத்தல்


‘பட்டம் - பால்நிற மதியம்

படர்சடைச் சுடர்விடு பாணி'

(திருஞான. தேவா.1988: 1-2)

படம்புடைத்திருத்தல் (மெய்

போர்த்திருத்தல்) Patamputaittiruttal

(cover)

(1) பௌத்த சமயம் - Buddhism

'பணிய யாதுமோர் பரிவு இலன்

படம்புடைத்திருந்தான்'

(நீலகேசி.476: 4)

படுசுழிப் படுதல் Patuculip patutal

(caught in whirlpool)

(1) தடுமாற்றம், துன்பம் - stagger

confusion, affliction

'பழுது நான் உழன்று

உள் தடுமாறிப் படுசுழித் தலைப்

பட்டனன் எந்தாய்' (சுந் தேவா.184:

3-4)

படைப்புண் அகம் அழல் நெய்

பெய்தல் Pataippun akam alal ney peytal

(pour hot ghee in wound)

(1) துன்பம் - affliction

'மரணம் பயக்கு மதர்வைத்

தாயநின் கடைக்கண் நோக்கம்

படைப்புண் அகவயின் அழல்நெய்

பெய்தென்று ஆற்றேன் என்னை'

(பெருங்.வத்.7: 21-23)

படைவீரர்களின் வாளின் கூரிய

பகுதிகளில் ஈக்கள் சூழ்ந்து மொய்த்தல்

Pataivirarkalin valin kuriya pakutikalil

ekkal culntu moyttal|

(1) தீமை, இறப்பு, அழிவு - bad

omen

'வாளின் வாய்களை ஈ

வளைக்கின்ற' (கம்ப.ஆரண்.430: 1)

பண் (சேணம்) Pan (saddle)

(1) கட்டுப்பாடு - control

'வண்மை இலாளர் வனப்பு

இன்னா ஆங்கின்னா பண் இல்

புரவி பரிப்பு' (இன்னா .9: 3-4)


பந்து


பண்டி (சகடம், வண்டி ) Panti(cart)

(1) உடம்பு - body

'உழந்தாலும் புத்தச்சொன்

றிட்டூர்த றேற்றா திழந்தார்

பலரால் இடும்பை நீர் யாற்றுள்

அழுந்துமால் அப்பண்டி யச்சிறா

முன்னே கொழுஞ்சீலம் கூலியாக்

கொண்டூர்மின் பாகீர்' (சீவக.

2621)

பத்து Pathu (Ten)

(1) இந்திரியம் - senses

'அறுபதும் பத்தும் எட்டும்

ஆறினோடு அஞ்சும் நான்கும்

துறுபறித்து அனைய நோக்கி'

(சுந்.தேவா.926: 1-2)

பதடி Patati (chaff)

(1) வீண் - useless, waste

'எல்லாம் எவனோ ? பதடி

வைகல் - பாணர் படுமலை

பண்ணிய எழாலின் வானத்து

அஞ்சுவர நல் இசை வீழ'

(குறு.323: 1-3)

(2) பயனின்மை , பயனிலி - unuseful

'பயன் இல் சொல் பாராடுவானை

மகன் எனல் மக்கட் பதடி எனல்'

(குறள். 196)

(3) பொய்ம்மை - untruth

'படுபொருளின்றி நெல்லில்

பதடிபோல் உள்ளிலார் மெய்'

(பெரிய,2717: 1-2)

பதுமபுரம் Patumapuram (a city)

(1) வளமை - prosperous

'நீ வருதல் ஒழியென்று நிறை

பதுமபுரத்துக்கே' (நீலகேசி.267:

1)

பந்து Pantu (ball)

(1) விளையாட்டு - play

'பந்தும் பாவையும் கழங்கும்

எமக்கு ஒழித்தே ' (ஐங்.377: 4)

(ஒப்பு) Ball அடக்கம், உருண்டை ,

குழந்தைப் பருவம்,

நிலைபேறுடைமை, பூமி, பூமியின்


190