பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பனி

நீடிப்பாற்றல், புயல், வளமை,

வராக அவதாரம், அருவருப்பான

அழுக்குடைய தன்மை, அழிவு,

கட்டுக்கடங்காத தன்மை,

பேருண்டி, முட்டாள்தனம்.

பனி Pani (dew)

(1) நுட்பம் - subtle, minuteness

வெண் கோடு இயம்ப, நுண் பனி

அரும்ப' (நற்.58:7)

(2) கடுமை, நடுக்கம் - severe,

shivering

கடும் பனி அற்சிரம் நடுங்க,

காந்தக' (நற். 86:4) |

(3) தண்மை - cool

கண்ணும் தன் பனி வைகின;

அன்னோ !' (நற். 197:3)

(4) சிறுமை / சிறிய அளவு -

smallness / small quantity

'இனியாரை உற்ற இடந்தீர்

உபாயம் முனியர் செயினும்

மொழியால் முடியா துனியால்

திரையுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!

பனியால் குளம்நிறைதல் இல்'

(பழமொழி.127)|

(5) நிலையாமை - transitory

'மீனிற்குமோ இந்த வெங்கண்

சுறாமுனம் வீசுபனி தானிற்குமோ

இக்கதிரவன் தோற்றத்தில்

தார்மன்னனே' (தனிப். 114: 3-4)

(ஆ) புற்பனி Purpani

(6) நிலையாமை, அழிவு

'அறியாப் பருவத் தடங்காரோடு ஒன்றி

நெறியல்ல செய்தொழுகி யவ்வும்

நெறியறிந்த நற்சார்வு சாரக் கெடுமே

வெயின்முறுகப் புற்பனிப் பற்றுவிட்

டாங்கு' (நாலடி.171)

(இ) வெயிலுறு பனி Veyilunu pani

அழிவு

'மின்னின் ஒத்து இறக்கும் செல்வம்

வெயிலுறு பனியினீங்கும்'

(சீவக. 1537: 2)

(ஈ) புல் நுனைப் பனிநீர். Pul nunaip

paninir

நிலையாமை / அழிவு


பனுவல்


'புல் நுனைப் பனிநீர் அன்ன

மனிசரைப் பொருள் என்று உன்னி'

(கம்ப.யுத்.1252: 3)

(ஒப்பு) Dew, Ice, Mist, Snow

இளமை, உறக்கம், கன்னிமை,

குளிர்காலம், தூய்மை, நினைவு,

பிரித்தெடுத்தல், புத்துணர்ச்சி,

பேரெண்ணிக்கை, மறைத்தல்,

மறுபிறப்பு, மென்மை , மீட்பு ,

வளமை, வெண்மை , இறப்பு,

நிலையாமை, போலிப்புகழ்ச்சி,

பனுவல் Panuval (text / book)

(1) பயன் - usefulness

பயன் தெரி பனுவற் பை தீர்

பாண!' (நற்.167:6)

(2) நுண்மை - minuteness / subtle

"நுணங்கு நுண் பனுவல் போல,

கணம் கொள' (நற்.353:2)

(3) மாசின்மை , தூய்மை - spotless,

pure

'மாசு இல் பனுவற் புலவர் புகழ்

பல நாவின் புனைந்த நன் கவிதை

மாறாமை' (பரி.6:7-8)

(4) புகழ், நயம் - famous, meritorious

'நல் இசை நிறுத்த நயம் வரு

பனுவல்' (அகம்.352: 13)

(5) நன்மை - good / beneficial

' .. .. .. புரை இல நல் பனுவல்,

நால் வேதத்து' (புறம்.15: 16-17)

(ஆ) நூல் Nil

(6) அறம் - ethics

'மருந்து உரை இருவரும், திருந்து

நூல் எண்மரும்' (பரி.8: 5)

(7) ஞானம் | அறிவு - wisdom /

knowledge)

'விரி நூல் அந்தணர் விழவு

தொடங்க, புரிநூல் அந்தணர்

பொலம் கலம் ஏற்ப' (பரி,11: 78-

79)

(பரி.11:78-79)

(8) நெறிமை - principle/code

'திறம் வேறு செய்தியின் நூல்

நெறி பிழையாது' (கலி.99:3)

(9) செம்மை - refinement

'செந் நூற் கழி ஒருவன் கைப்

பற்ற, அந் நூலை முந் நூலாக்

197