பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பன்றி

பறைக்கண் கடிப்பிடு மாறு'

(பழமொழி, 178)

(ஈ) தூரியம் (மங்கலப் பறை)

Turiyam

(7) அரசமைதி - royalty

'மன்னவற்கு ஏழிசைத் தெழுந்த

தூரியம்' (சூளா.1055:3)

(உ) பறை கிழிதல் Parai kilital

(8) பயன்பாடின்மை - of no use

'இறைகளோடு இசைந்த இன்பம்

இன்பத்தோடு இசைந்த வாழ்வு

பறைகிழித்து அனைய போர்வை

பற்றியான் நோக்கினேற்கு'

(சுந்.தேவா.924: 1-2)

பன்றி Panri (pig)

(1) தறுகண்மை | வீரம், அஞ்சாமை

- brave / courageous, fearless

'சிறுதினை மேய்ந்த தறுகட் பன்றி'

(ஐங்.262: 1) |

(2) வலிமை - strong

‘வன்பெரும் பன்றி தன்னை -

எரியினில் வதக்கி மிக்க'

(பெரிய,766: 5-6)

(ஆ) பன்றி ஒருத்தல் Panrl oruttal

(male pig)

(3) சினம் - wrath

'சிறு கட் பன்றி பெருஞ்சின

ஒருத்தல்' (நற்.82: 7)

(இ) களிறு Kalina

(4) திருமால் - vishnu

'நானிலம் துளக்கு அற முழு முதல்

நாற்றிய பொலம் புனை இதழ்

அணி மணி மடற் பேர் அணீ

இலங்கு ஒளி மருப்பின் களிறும் -

ஆகி மூஉரு ஆகிய தலைபிரி

ஒருவனை ! (பரி.13: 34-37)

(ஈ) கேழல் Kelal (boar)

திருமால் - vishnu

'கேழல் திகழ்தரக் கோலமொடு

பெயரிய ஊழி ஒருவினை

உணர்த்த லின்' (பரி.2: 16-17)


பன்றி


(உ) கோட்டுமா ஊர்தல் Kottuma

urtal (riding a boar)

(5) தீமை, இறப்பு, இழிவு - evil omen

(dream)

'கோவலன் கூறுமோர் குறுமகன்

தன்னால் காவல் வேந்தன் கடிநகர்

தன்னில் நாறைங் கூந்தல் நடுங்கு

துயரெய்தக் கூறைகோட் பட்டுக்

கோட்டுமா ஊரவும் .. .. .. .. நனவு

போல நள்ளிருள் யாமத்துக் கனவு

கண்டேன் கடிதீங்கு உறுமென'

(சிலப். 15:95-106)

(ஊ) ஏனம் Enam

(6) விரைவு - fast

'கைவரைகளும் வெருவுறமிடை

கானெழுவதோர் ஏனம் பெய்கரு

முகிலென இடியொடு பிதிர்கனல்

விழி சிதறி மொய்வலைகளை

அறநிமிர்வுற முடுகிய

கடுவிசையில்' (பெரிய, 736: 3-8)

(7) திருமால் - vishnu

'ஆதி ஏனமதாய் இடக்கல் உற்றான்

என்று அதனை வந்தணைதரும்

கலுழன்' (பெரிய, 18: 7-8)

(8) வேகம், வலிமை - speed, strength

'கடுமுரண் ஏனம் ஆகி,

முன்கலந்து' (திருவா.4: 6)


(எ) கருவிலங்கு Karuvilaiku

இழிவு - low, mean

'இழிவாகும் கருவிலங்கும்

பறவையுமாய் எய்தாமை'

(பெரிய, 1981:5-6)

(ஏ) வலையிற் பிழைத்த பன்றி

Valaiyir pilaitta panri

(9) வெல்லற்கருமை

'மாதவன் என் மணியினை

வலையிற் பிழைத்த பன்றி போல்

ஏதும் ஒன்றும் கொளத் தாரா

ஈசன் தன்னைக் கண்டீரே'

(நாலா.641: 1-4)

(ஒப்பு) Pig, Wild Boar அஞ்சாத

தன்மை, அதிர்ஷ்டம், ஆண்மை,

ஆற்றல், இனப்பெருக்க வளம்,

இயல்நிலை கடந்த தன்மை,

சுதந்திரம், தூய்மைப்படுத்துதல்,

196