பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவை விளக்கு

ஆரூரைப் பண்டெலாம் அறியாதே

பனிநீரால் பாவை செயப்

பாவித்தேனே' (திருநா தேவா. 1221:

5-8)

(ஓ) பொறியறு பாவை Poriyaru

pavai (mechanical doll with broken

switch)

(23) செயலின்மை - inactive

'தெளிதல் செல்லா திண்திறை

அழிந்து பொறியறு பாவையின்

அறிவறக் கலங்கி' (பெருங் உஞ்.33:

145-146)

(ஔ) பொற்பாவை Porpavai (gold

doll | statue)

நிலையாமை - transitory /

impermanent

'கரிகுவ தீகுவ கனல்வ காட்டலால்

உருகு பொற் பாவையும் ஒத்துத்

தோன்றினாள்' (கம்ப, பால.536: 3-

4)

(க) வரைந்த பாவை Varainta

pavai (painted doll)

(24) அசைவற்ற நிலை - unmoving

'வட்டிகைச் செய்தியின் வரைந்த

பாவையின் எட்டி குமரன்

இருந்தோன் தன்னை ' (மணி.4: 57-

58)

(ங) வெண்ணெய்ப் பாவை

Venneyp pavai (butter doll)

அழிவு, நிலையாமை - ruin,

impermanent

'பந்தெடுக்கலாத நங்கை பால்கடை

வெண்ணெய்ப் பாவை வெந்துடன்

வெயில் உற்றாங்கு மெலிந்துக

விளங்கும் வெள்ளி' (சீவக. 1532:

2-3)

பாவை விளக்கு Pavai vilakku (doll-

lamp)

(1) மங்கலம் - anspicious

'பூரண கும்பமும் பொலம்

பாலிகைகளும் பாவை விளக்கும்

பிடவு


பலவுடன் பரப்புமின்' (மணி.1: 44-

145)

பாழி (ஒரு நகரம்) Pali

காவல் - secure

'பாழி யன்ன கடியுடை வியனகர்'

(அகம்.15: 10-11)

பாழூரில் பயிக்கம்புக்கு எய்தல்

Paluril payikkampukku eytal (living in a

desolate city)

(1) பயனின்மை – waste / futile

ஆவியைப் போகாமே தவிர்த்து

என்னை ஆட்கொண்ட ஆரூரரைப்

பாவியேன் அறியாதே பாழூரில்

பயிக்கம்புக்கு எய்தவாறே'

(திருநா தேவா. 1225: 5-8)

பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற்

கீழ் கோளரி மாதவன் வருதல் _Palaik

kamuku paricu utaip pantar kil kolari

Matavan varutal (arrival of Vishnu under

a festive canopy (dream))

(1) திருமணம் - wedding

'நாளை வதுவை மணம் என்ற

நாள் இட்டு பாளைக் கமுகு பரிசு

உடைப் பந்தற் கீழ் கோளரி

மாதவன் கோவிந்தன் என்பான்

ஓர் காளை புகுதக் கனாக்

கண்டேன்' (நாலா.557)

பிடவு Pitavu (a flower)

(1) மழைக்காலம் --rainy season

'மறந்து கடல் முகந்த கமஞ் சூல்

மா மழை பொறுத்தல் செல்லாது

இறுத்த வண் பெயல் கார் என்று

அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல

பிடவமும், கொன்றையும்,

கோடலும் - மடவ ஆகலின்,

மலர்ந்தன பலவே' (நற்.99: 6-10)

(2) நறுமணம் - fragrance

செவ் வரி இதழ சேண் நாறு

பிடவின்' (நற்.25: 2)

(3) மாலைக்காலம் - even time

வண்டு வாய் திறப்ப விண்ட

பிடவம், மாலை அந்தி, மால்

அதர் நண்ணிய' (நற்.238: 3-4)

(4) அழகு - beauty






















205