பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மான்

(11) (இறை) வழிபாடு - worship (of

god)

அந்தி அந்தணர் அருங்கடன்

இறுக்கும் முத் தீ விளக்கின்'

(புறம்.2; 22-23)

(12) மகிழ்ச்சி - glad

'கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி,

ஆடு துவன்று விழவின், நாடு

ஆர்த்தன்றே ' (மது.427-428)

(13) இரங்கல் - pity

'அந்திமாலை வந்ததற்கு இரங்கி'

(சிலப்.8: 84)

(14) சிவப்பு நிறம் - red

செந்தீப் பரந்த திசைமுகம்

விளங்க அந்திச் செக்கர்

வெண்பிறை தோன்ற' (சிலப்.27:

145-146)

(இ) எரி சிந்தி வந்த மாலை Eri

cinti vanta malai (eventime, spilling

fire)

(15) துன்பம் - suffering

'தளையவிழ் மலர்க்குழலாய்

தணந்தார் நாட்டுளதாம் கொல்

வளைநெகிழ எரிசிந்தி வந்த இம்

மருண்மாலை' (சிலப்.7: 40)

(ஈ) அந்தியம் போது Antiyam

potu

(16) அழிவு, இறப்பு - destruction,

death

'அந்தியம் போதில் அரி உருவாகி

அரியை அழித்தவனை' (நாலா.6:

5-6)

(ஒப்பு) Evening அமைதி, ஓய்வு,

நிறமற்ற நிலை, பருவம், மனித

வாழ்க்கை ; சிக்கல்.

மான் Man (deer)

(1) விரைவு - quick, speed, fast

கடு மான் புல்லிய காடு

இறந்தோரே' (நற்.14:11)

(2) மடமை - ignorant

'கழிப் பெயர் களரில் போகிய மட

மான்' (நற்.242: 7)

(3) நொய்ம்மை, மென்மை

fragile,soft


மான்


'நொய்யதோர் மான்மறி

கைவிரலின் நுனிமேல்

நிலையாக்கி' (திருஞான தேவா.69:

1-2)

(4) பெண் - woman

'தனது மெய்க்கு மலரணையானது

தழலிறைக்கும் தனச்சுமையால்

இடைமினது மெய்க்கும் துவளுமிம்

மான் அந்த மேனகைக்கும்

வெகுமிச்ச நாணுண்மை'

(தனிப்.839: 1-4)

(ஆ) கவரிமான் Kavariman

(5) மானம் - honour

'மயிர் நீப்பின் வாழாக் கவரிமான்

அன்னார் உயிர் நீப்பர் மானம்

வரின்' (குறள். 969)

(இ) கலை Kalai

(6) தலைவன் - hero

'நீர் சூழ் மா மலர் அன்ன கண்

அழ, கலை - ஒழி பிணையின்

கலங்கி ' (நற்.37: 5-6) -

(7) விரைவு - quick

சிலைமாண் கடுவிசைக்

கலைநிறத்து அழுத்தி' (குறு.272: 5)

(8) தூய்மை - pure

'உரிவை மேகலை உடீஇப்

பரிவொடு கருவில் வாங்கிக்

கையகத்துக் கொடுத்துத் திரிதரு

கோட்டுக் கலை மேலேற்றி'

(சிலப்.12: 1.30-32)

(ஈ) மான்நோக்கு Mannokku

(9) மருட்சி / மயக்கம், மடமை -

reflexicity/ confusion, ignorance

மான் அமர் நோக்கம் காணா

ஊங்கே ' (நற்.101:9)

(உ) ஏப்பெற்ற மான்பிணை

Epperra matpinai

(10) துன்பம் - affliction

'ஏப்பெற்ற மான்பிணைபோல்

ஏங்குவார் இன்னுயிரை'

(சீவக.2965: 3)

(ஊ) கவரிமா Kavarima

மானம் – honour


244