பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள்

security

'முழவு கண் துயிலாக் கடியுடை

வியல் நகர்' (புறம்.247: 8)

முள் Mul (thorn)

(1) கூர்மை - sharp -

'சுறவுக் கோட்டன்ன முள் இலைத்

தாழை ' (நற்.19: 2)

(2) பாதுகாப்பு - protect

'ஒலி காவோலை முள் மிடை

வேலி' (நற்.38: 8)

(3) கொடுமை | வளைவு - cruel!

curve

கொடு முள் ஈங்கை நெடு மா அம்

தளிர்' (நற்.205:9)

(4) நுட்பம் - minute

-'நுண் முள் வேலி தாதொடு

பொதுளிய' (நற்.277: 6)

(5) வலி / காவல் - strong/secure

'முள் அரைத் தாமரை முகிழ் விரி

நாட்போது' (சிறுபா.183)

(6) பகை, பகைவர் - enmity

'தெள்ளி யுணரும் திறனுடையார்

தம்பகைக்கு உள்வாழ் பகையைப்

பெறுதல் - உறுதியே கள்ளினால்

கள்ளறுத்தல் காண்டும்

அதுவன்றோ முள்ளினால்

முட்களையு மாறு' (பழமொழி.308)

(12) துன்பம் - suffering

'முள் உடைக் காட்டின் நடத்தல்

நனியின்னா ' (இன்னா .33: 2)

(ஒப்பு) Thorn உண்மை , கடினம்,

கூரிய அறிவாற்றல், கன்னிமை,

இழப்பு, இனிய

குணமில்லாதிருத்தல், உள நைவு,

தீமை, வலி,

முள்ளில் புனைமரம் ஏறல் Mullil

punaimaram erutal (ascend a thorn tree)

(1) துன்பம் - suffer

'வள் உகிர்ப் பேழ்வாய் ஞமலி

வடிவுகள் அள்ளிக் கதுவவல் அறி

அயலது முள்ளிற் புனைமரம் ஏற

முயல்வார்' (சூளா. 1934: 2-4)

முளரி (முட்செடி) Mulari (thorny bush)

(1) கொடுஞ்சொல் - cruel words


மெழுகு


'விளரியாழ்ப் பாண்மகனே!

வேண்டா வழையேன் முளரி

மொழியா துளரிக் - கிளரிநீ'

(திணைமாலை:126)

முன்கைநெடியார் Munkainetiyar (long

forearm)

(1) ஆற்றல் - power

'எங்கணொன் றில்லை எமரில்லை

என்றொருவர் தங்க ணிழவுதாம்

செய்யற்க - எங்கானும் நன்கு திரடு

பெரியவாம், ஆற்றவும் முன்கை

நெடியார்க்குத் தோள்'

(பழமொழி.156)

மூரிக்கடல் Murikkatal (ocean)

(1) விரைவு - quick

'ஆலமே அனைய மெய்யர்

அகலிடம் அழிவு செய்யும் காலம்

மேல் எழுந்த மூரிக்கடல் எனக்

கடிது செல்வார்' (கம்ப.சுந்.756; 3-

மெல்கோல் (பல் துலக்கும் கோல்)

Melkol

(1) தூய்மை - clean

'பறைந்துபோய் மெல்கோலாற்

பல்லெலாம் . தூயவாம்'

(நீலகேசி.278: 2)

மெழுகு Meluku (paraffin / wax)

(1) நிலையாமை, அழிவு - transitory,

destroy

'.. .. .. .. எரி பரந்த நெய்யுள்

மெழுகின் நிலையாது, பை பயத்

தேயும் - அளித்து - என் உயிர்'

(கலி.138: 21-23)

(2) நெகிழ்ச்சி - melt

'தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர்

விரைந்தே ' (ஐங்.32:4)

(ஆ) எரி உறு மெழுகு Eri uru

meluku (wax in fire)|

(3) நிலையழிதல்

'இட்டநாண் வேலி உந்திக்

கடலென எழுந்த வேட்கை

விட்டெரி கொளுவ நின்றள்


253