பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாள்


'ஏழை மானுட இன்பினை

நோக்கி இளையவர் வலைப்

பட்டிருந்து இன்னம் வாழை தான்

பழுக்கும் நமக்கு என்று வஞ்ச

வல்வினையுள் வலைப் பட்டு'

(சுந்.தேவா. 192: 1-4) |

(ஆ) காற்றெறி வாழை Karreri

valai_(plantain swaying in wind)

கலக்கம் / நடுக்கம் - confusion /

trembling

'காற்றெறி வாழையின் கலங்கி

மெய்ந்நடுங்கி' (பெருங்.உஞ்.43:

- 138)

(இ) வாழை மேல்வயிரம்

கூர்த்தல் Valai mel vayiram kurttal

(sharpening diamond on plantain)

(7) வலிமை , உறுதி - strength, firm

'ஆழியும் அகலத்த திருவும்

வாங்கியிப் பாழியம் தோளினான்

பால வாக்கினால் ஏழையும்

எம்மையும் அறியும் என்றனர்

வாழைமேல் வயிரம் கூர்த்தனைய

மாண்பினார்' (சூளா. 1212)

வாள் Va} (sword)

(1) வலிமை - strength

'உறு பகை தணித்தனன், உரவு

வாள் வேந்தே ' (நற்.81: 10)

(2) பிரிவுத்துன்பம், கொடுமை

seperation, cruel

'தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்

வாள் போல் வைகறை

வந்தன்றால் எனவே'

(குறு.157: 3-4)

(3) வெற்றி - victory

'வலம் படு வென்றி வாய் வாள்'

(அகம் 213:21)

(4) வன்கண்மை , வீரம் - vehemence,

valour

'ஒளிறு வாள் மறவரும். .. .. .. ...'

(புறம்.227: 4)

(5) செயலாற்றல் - capable

'வையகம் புகழ்ந்த வயங்கு வினை

ஒள் வாள்' (புறம்.230: 5)

(6) ஆண்மை - manliness

'வாள் மிசைக் கிடந்த

ஆண்மையோன் திறத்தே '

(புறம்.270: 13)


வாள்


(7) இறப்பு / நிலையாமை - death /

transient

'நாள் என ஒன்றுபோல் காட்டி,

உயிர் ஈரும் வாளது உணர்வார்ப்

பெறின்' (குறள்.334)

(8) பெருமை - greatness

'ஓடோ மறவர் உருத்த மதம்

செருக்கிப் பீடுடை வாளார்

பிறங்கிய ஞாட்பினுள்'

(களவழி.28: 1-2)

(9) ஆற்றல் ! வலிமை - power /

strength

'வன் துணை வாளேயாகச்

சாரிகை மறி வந்து' (பெரிய,424:

3-4)

(ஆ) வாள் அகப்படுதல் Vin

akappatutal (caught with sword)

(10) பகைத்திறம் - hostile

'வாள் அகப்பட்டானை, ஒவ்வான்

எனப்பெயரும் மீளி மறவனும்

போன்ம்' (கலி.104: 49-50)

(இ) எஃகம் Ekkam

கூர்மை - sharp

'கதுவாய் போகிய துதிவாய்

எஃகமொடு' (புறம்.353: 15)

(ஈ) எஃகு Ekku

வெற்றி - victory

'தாங்குநர் தடக் கை யானைத்

தொடிக் கோடு துமிக்கும்

எஃகுடை வலத்தர், நின்

படைவழி வாழ்நர்'

(பதி.51: 29--30)

(ஒப்பு) Sword அரசத்தன்மை ,

அறிவாற்றல், ஆண்மையின்

சிறப்பு, ஆன்மீக ஆற்றல்,

உயர்தகுதி, உயிர்த்தியாகம்,

உரிமைத்திறம், கடினத்தன்மை ,

காதல், சூரிய ஆற்றல்,

செயற்பாங்கு, தீமையை அழிக்கும்

ஆற்றல், தூய்மைப்படுத்துதல்,

நீதி, பாதுகாப்பு, புனித ஆற்றல்,

போர் வீரர்கள், மதிப்பு,

வலிமை, வளமை, - வாழ்க்கை ,

வீரம், வெற்றி; அழிவாற்றல்,

265