பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாள்


திறம், இறப்பு, காமம், சண்டை ,

தண்டனை, பழிதீர்ப்புச்செயல்.

வாள் Val (sinkle)

(1) கூர்மை - sharp

'நெல் அரி தொழுவர் பர் வாள்

உற்றென' (நற்.195: 6)

வாளம் (சக்கரவாகம்) Valam (a

legendary bird)

(1} பிரிவின்மை - inseperable

'கங்குலும் பகலும் எனப்

பொலிவன கமலம் மங்கைமார் தட

முலை எனப் பொலிவன வாளம்'

(கம்ப.கிட்,20: 3-4)

வாளை Valai (sword fish)

(1) தலைவன் - hero

'கோலச் சிறுகுருகின் குத்தஞ்சி

ஈர்வாளை நீலத்துப்

புக்கொளிக்கும் ஊரற்கு'

(ஐ.ஐம்.24: 1-2)

வான் Van (sky)

(1) உயர்வு - high

'வான் உற நிவந்த பெரு மலைக்

கவா அன்' (நற்.53: 4)

(2) புகழ் - fame

'வான் தோய் நல்லிசை

உலகமொடு உயிர்ப்ப' (பதி.37; 6)

(3) ஈகை | கொடை - benevolence,

giving

'சுரந்த வான் பொழிந்தற்றா, சூழ

நின்று யாவர்க்கும் இரந்தது நசை

வாட்டாய் என்பது

கெடாதோதான்' (கலி.100: 11-12)

(4) தூய்மை - pure.

'மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த

தொல் நிலம்' (கலி, 103:77)

(5) விரிவு - expance

'வீயாது பரந்த நின் வசை இல்

வான் புகழே' (புறம்.168: 22)

(ஆ) வானம் Vanam

உயர்வு - high, lofty

'வானினும் உயர்ந்தன்று'

(குறு.3:1)

விரிவு - extensive

வான்


'ஞாயிறு பட்ட அகல்வாய்

வானத்து' (குறு.92: 1)

வண்மை - bountiful

'வண்மைபோல் வானம் பொழிந்த

நீர்' (பரி,22; 8)

(6) வளம் - fertile

'வறம் தெற மாற்றிய வானமும்

போலும்' (கலி, 146: 14)

(7) மழைவளம் – enriching rains

'கான் உயர் மருங்கில் கவலை

அல்லது, வானம் வேண்டா வில்

ஏர் உழவர்' (அகம்.193: 1-2)

(8) நீர்மை - watery

'குண கடல் முகந்த கொள்ளை

வானம்' (அகம்.278: 1)

(9) சிறப்பு - eminent

'வான் நின்று உலகம் வழங்கி

வருதலால் தான் அமிழ்தம்

என்றுணரற் பாற்று' (குறள்.11)

(இ) விசும்பு Vicumpu

சேய்மை , உயர்வு - distant, lofty

'சேய் விசும்பு இவர்ந்த செழுங்

கதிர் மண்டிலம்' (நற்.67: 1)

விரிவு - expanse, spreading

'அகல் இரு விசும்பின் அரவுக்

குரைபடுத்த' (நற்.377: 6)

(10) பேரளவு - huge

'மழை தொழில் உலந்து, மா

விசும்பு, உகந்தென' (நற்.333: 1)

(11) அளவின்மை - unmeasurable

'நீர், நிலம், தீ, வளி,

விசும்போடு, ஐந்தும் அளந்து

கடை அறியினும், அளப்பு அருங்

குரையை ' (பதி.24: 15-16)

புகழ் - fame

'மாயாப் பல் புகழ் வியல் விசும்பு

ஊர்தர' (பதி.90: 10)

(ஈ) விண் Vin

உயர்வு - lofty

'விண் உயர் பிறங்கல் விலங்கு

மலை நாட்டே ' (குறு.144:7)

புகழ் - fame

'வீயா விழுப் புகழ், விண் தோய்

வியன் குடை' (அகம், 135:11)

(உ) ஆகாயம் Akiyam

(12) ஒளி - light, shine

266