பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுகதிர்...


விடுகதிர் பருதி முன்னர் மின்மினி

விளக்கம் Vitukatir paruti munnar

minminl vilakkam (fire fly before sun)

(1) தகுதியின்மை , சிறுமை - unworthy,

mean

'வடதிசைக் குன்ற மன்ன வான்குல

மாசு செய்தீர் விடுகதிர்ப் பருதி

முன்னர் மின்மினி விளக்கம்

ஒத்தீர்' (சீவக. 742: 1-2)

விண் தொடர் மதியினைப் பிளந்து

மீன் எழுதல் Vin totar matiyinaip

pilantu min elutal (star piercing the

moon)

(1) தீமை, அழிவு, இறப்பு - evil, death,

destruction

'விண் தொடர் மதியினைப்

பிளந்து மீன் எழும்'

(கம்ப.சுந்.375: 1)

விண்ணும் மண்ணும் அதிர்தல் Vinnum

mannum atirtal (sky and earth tremble)

(1) தீமை, அழிவு, இறப்பு

'மண்ணும் விண்ணும் அதிர்ந்தவே'

(சீவக.2173: 8)

விண்ணுலகம் Vinnulakam (heaven)

(1) இன்பம் -- happiness, pleasure

'நுண்ணுணர்வி னாரொடு கூடி

நுகர்வுடைமை விண்ணுலகே

ஒக்கும் விழைவிற்றால்- நுண்ணூல்

உணர்விலர் ஆகிய ஊதியம்

இல்லார்ப் புணர்தல் நிரயத்துள்

ஒன்று ' (நாலடி. 233)

விரிச்சி Viricci (oracle)

(1) முன்னுணர்தல் - predict,

premonitiar

'திருந்து இழை மகளிர் விரிச்சி

நிற்ப (நற். 40: 4)

(2) நற்சொல் - promphetic words

'நெல் நீர் எறிந்து விரிச்சி ஒர்க்கும்

செம் முது பெண்டின் சொல்லும்

நிரம்பா ' (புறம். 280: 6-7)


வில்


விரும்பிப் பிடித்த வெண்மலர் வீழ்ச்சி

Virumpi pititta venmalar vilcci (beld while

flower falling hand)

(1) இடையூறு - obstacle

'விரும்பி நீ பிடித்த வெண்மலர்

வீழ்ச்சி பொருந்தி நீ அளக்கும்

பொருவில் போகத்து இடையூறு

உண்மை முடியத் தோன்றும்'

(பெருங். இலா. 13: 54-56)

வில் Vil (bow)

(1) வலிமை - strength

'வல் வில் ஓரி கானம் நாறி'

(நற்.6: 9)

(2) கொடுமை - cruel

கொடு விற் கானவன் கோட்டுமா

தொலைச்சி' (நற்.75: 6)

(3) வீரம், கொலை - valour, killing

'விழுத் தொடை மறவர் வில் இடத்

தொலைந்தோர்' (ஐங்.352: 1)

(4) வளைவு / வருத்துதல் - crooked

/afflict

நெறி செறி வெறி உறு முரல்

விறல் வணங்கு அணங்கு வில்'

(பரி.1: 18)

(5) சொல், விரைவு - word, quickness

'வல்லவன் தைஇய வாக்கு அமை

கடு விசை வில்லினான் எய்தலோ

இலர்மன்; ஆயிழை! வில்லினும்

கடிது, அவர் சொல்லினுள் பிறந்த

நோய்' (கலி.137:9-11)

(6) சேரன் - cera king

'புலியொடு வில் நீக்கி, புகழ்

பொறித்த கிளர் கெண்டை'

(கலி.104:3)

(7) வெற்றி - victory

'கலி கொள் மள்ளர் வில்

விசையின் உடைய' (அகம்.185: 7)

(8) புகழ் - fame

'செல்லா நல் இசை நிறுத்த வல்

வில்' (அகம். 209: 13)

(9) வேட்டை - hunt

'கற்று உரிக் குடம்பைக் கத நாய்

வடுகர் வில் சினம் தணிந்த வெரு

வரு கவலை ' (அகம்.381:7-8)

(ஆ) சிலை Cilai

வளைவு - curved


269