பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வான ஊர்தி ஏறல்


'வான்மதி - இழந்த மீனினம்

போலப் பொலிவின்று ஆகிப்

புல்லென் கோலமொடு'

(பெருங்.உஞ்.47: 260-261)

வான ஊர்தி ஏறல் Vana urti eral (ride the

flying vehicle)

(1) மேன்மை - eminence -

'பீடுகெழு நங்கை பெரும்பெயர்

ஏத்தி வாடா மாமலர் மாரி

பெய்தாங்கு அமரர்க்கு அரசன்

தமர் வந்தேத்தக் கோநகர்

பிழைத்த கோவலன் தன்னொடு

வான ஊர்தி ஏறினண் மாதோ

சென்றுற மேன்மேல் நெருங்கும்'

கானமர் புரிகுழற் கண்ணகி

தானென்' (சிலப்.23: 195-200)

(2) இறப்பு - death

'புலவர் பாடும் புகழுடையோர்

விசும்பின் வலவன் ஏவா வான

ஊர்தி எய்துப என்ப, தம் செய்

வினை முடித்து ' (புறம்.27: 7-9)

வானம்பாடி Vanampati (skylark)

(1) செழிப்பு - luxuriant

'வானம்பாடி வறம் களைந்து,

ஆனாது அழி துளி தலைஇய

புறவில்' (ஜங், 418:1-2)

(2) எதிர்பார்ப்பு | மகிழ்ச்சி -

expectation / happiness

'துளி நசை வேட்கையான் மிசை

பாடும் புள்ளின்' (கலி. 46:20)

(3) நோன்மை - asceticism

'துளியுண் பறவைபோல்

செவ்வன்நோற் பாரும்'

(பழமொழி, 248: 3)

வானில் உள்ள நட்சத்திரங்கள்

உதிர்ந்து வீழ்தல் Vanil ulla

natcattirankal utirntu viltal (falling stars)

(1) தீமை,அழிவு, இறப்பு - evil

omen, destruction, death -

'முகிற் குலம் இன்றித் தா இல்

வான் வெடிபட அதிருமல் உதிரும்

மீன் எலாம்' (கம்ப.சுந்.371:3-4)

(ஆ) விண்மீ ன் உதிர்தல் Vinmin

utirtal

(2) தீமை, தோல்வி, கேடு


விடவர் இயல்பு திரிதல்


'வானமீன் உச்சியுள் நின்ற

மாற்றலர் தானையுள் நடுவு

வீழ்ந்து அதிரத் தங்களுக்கு

ஊனமுண்டு என்பதை உணர்ந்து'

(சூளா . 1224: 1-3)

விச்சாதரர் Viccatarar (divine beings)

(1) முயற்சி, வேகம், வலிமை -

perseverance, speed, strength

'அசையா ஊக்கத்து அடிகளென்

உள்ளம் விசைகொள் நோந்தாள்

விச்சாதரர் போல் மிசையே

சென்றுற மேன்மேல் நெருங்கும்'

(பெருங்.நர.1: 230-232)

விசும்பு வீழ் கொள்ளி Vicumpu vil

kolli (meteor)

(1) அழிவு - destruction

‘விசும்புவீழ் கொள்ளியின்

பைம்பயிர் துமிப்ப' (குறு. 189:4)

(ஆ) உற்கம் Urkam

(2) தீமை, இறப்பு - evil, death

'காலனும் காலம் பார்க்கும்;

பாராது, வேல் ஈண்டு தானை

விழுமியோர் தொலைய, வேண்டு

இடத்து அடூ உம் வெல் போர்

வேந்தே! திசை இரு - நான்கும்

உற்கம் உற்கவும் (புறம். 41: 1-4)

(இ) எரி Eri

(3) அழிவு - destruction

'மிகவானுள் எரிதோன்றினும்'

(புறம். 395:34)

விட்டில் Vittil (grasshopper/ moth)

(1) வீழ்ச்சி , அழிவு - fall, destruction

'விரிசுடர் விளக்கம் கண்ட

விட்டில் போல் வீழ்வ காணாய்'

(கம்ப.ஆரண்.779: 4)

விடவர் இயல்பு திரிதல் Vitavar iyalpu tirital

(warrior's nature deviates)

(1) தீமை, தோல்வி - evil omen, defeat

'விடவரும் இயல்புகள் திரிந்து

மெல்லியன் மடவரல் அவரொடு

மாறுபட்ட னர்' (சூளா .1221: 1-2)

268