பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளக்கிருக்க மின்மினி..


(13) பெண்மை , அழகு - feminity,

beauty -

பெண் இயல் தீபம் அன்ன பேர்

எழிலாட்டி மாட்டு'

(கம்ப.ஆரண்.1029: 1)

ஞானம் | அறிவு - wisdom,

knowledge

'தீபமே அனைய ஞானத்

திருமறை முனிவர் செப்பும்'

(கம்ப.யுத்.610: 3)

(எ) வேத நல் விளக்கு Veta nal

vilakku (vedic lamp)

(14) மகிமை, இறைமை - glory,

godhood

'மின்திகழ் குடுமி வேங்கட

மலைமேல் மேவிய வேத நல்

விளக்கை தென்திசைத் திலதம்

அனையவர் நாங்கைச்

செம்பொன்செய் கோயிலினுள்ளே

மன்று அது பொலிய மகிழ்ந்து

நின்றானை வணங்கி நான்

வாழ்ந்தொழிந்தேனே'

(நாலா .1275:3-8)

(ஒப்பு) Lamp அருள், அழகு,

அறிவுத்திறம், அன்பு, இரக்கம்,

ஒளி, கன்னிமை, சிந்தனை

வாழ்க்கை , செழிப்பு, சுய தியாகம்,

தனிமை, தூய்மை, நிலைபேறு,

நெருப்பு, நற்பேறு, பார்வை, புனித

ஆன்மா, மெய்ப்பொருள், வளமை,

வழிகாட்டி, விழிப்புணர்வு; இருள்

மற்றும் அறியாமையை அகற்றுதல்.

விளக்கிருக்க மின்மினித் தீக்காய்தல்

Vilakkirukka minminit tikkaytal (warming

with fire fly, while there is lamp)

(1) அறியாமை - ignorance

'விதியின்றி மதியிலியோன்

விளக்கிருக்க மின்மினித் தீக்

காய்ந்தவாறே' (திருநா.தேவா. 1224:

7-8)

விளங்காய் Vilaikay (a hard fruit)

(1) பயனின்மை , வீண், புளிப்புச்

சுவை - waste, futile, sour taste

'சிறுகாலையே தமக்குச் செல்வுழி

வல்சி இறுகிறுகத் தோட்கோப்புக்


வீரர்களின் வில்..


கொள்ளார். இறுகிறுகிப்

பின்னறிவாம் என்றிருக்கும்

பேதையார் கைகாட்டும் பொன்னும்

புளிவிளங்கா யாம்' (நாலடி. 328)

விறகில் தீ Virakul fi(fire in wood)

(1) மறைவு - hidden

‘விறகில் தீயினன் பாலில் படு

நெய் போல் மறைய நின்றுளன்

மாமணிச் ' சோதியான்'

(திருநா. தேவா.30: 1-2)

(ஆ) விறகிடைத் தீ Virakitait ti

(2) புலப்பாடின்மை - not onservable

'விறகிடைத் தீயர் வீழி

மிழலையுள் விகிர்தனாரே'

(திருநா. தேவா. 1579: 4)

விறகு Viraku (fire wood)

(1) வெப்பம் - heat, warmth

'வஞ்சி விறகின் சுட்டு, வாய்

உறுக்கும்' (அகம்.216: 4)

(2) இறப்பு - death

'கரி புற விறகின் ஈம ஒள் அழல்'

(புறம்.231: 2)

வீமன் Viman (Bhima)

(1) வலிமை - strength

'வீமனென வலிமிகுந்த

திருமலைராயன் கீர்த்தி '

(தனிப்.394: 1)

வீரர்கள் அணிந்திருந்த கற்பக மாலை

புலால் நாற்றம் வீசுதல் Virarkal

anintirunta karpaka malai pulal narram

vicutal (flower garlands worn by

warriors emitting bad smell)

(1) தீமை, அழிவு - evil omen

'மல் பக மலர்ந்த தோள் மைந்தர்

சூடிய கற்பக மாலையும் புலவு

காலுமால்' (கம்ப.சுந்.372: 3-4)

வீரர்களின் வில் இற்று வீழ்தல்

Virarkalin vil irru viltal (bows of warriors

fall torn)

(1) தீமை, தோல்வி - evil omen, defeat


272