பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறை

அறை Arai (cow-shed)

(1) வளம் - fertile

'துறுகாழ் வல்சியர் தொழுஅறை

வெளவி,கன்றுடைப் பெருநிரை

மன்றுநிரை தரூஉம், நேரா

வன்தோள் வடுகர் பெருமகன்,

பேர்இசை எருமை நல்நாட்டு

உள்ளதை' (அகம்.253:16-19)

அன்றில்} Anril (a bird)

(1) பிரிவின்மை - inseperable

'ஒன்று இல் காலை அன்றில்

போலப் புலம்பு கொண்டு

உறையும் புன்கண் வாழ்க்கை'

(நற்.124:1-2)

(2) காதல் - love

'இன் துணை அன்றில் இரவின்

அகவாவே'(கலி.131:28)

(3)) தலைவி - heroine

'தெண்கடல் சேர்ப்பன் பிரியப்

புலம்படைந்து ஒண் தடங்கண்

டுஞ்சற்க ஒள்ளிழாய் நண்படைந்த

சேவலும் தன்னருகில் சேக்குமால்

என்கொலோ பூந்தலை அன்றில்

புலம்பு' (ஐந்த.ஐம்.41)

(ஆ) சேவல் (ஆண் அன்றில்) Ceval

(4) தலைவன் - hero

'தெண்கடல் சேர்ப்பன் பிரியப்

புலம்படைந்து ஒண் தடங்கண்

டுஞ்சற்க ஒள்ளிழாய்

நண்படைந்த சேவலும்

தன்னருகில் சேக்குமால்

என்கொலோ பூந்தலை அன்றில்

புலம்பு' (ஐந்.ஐம்.41)

அன்னம் Annam (swan)

(1) உயர்வு - high

'விசும்பு ஆடு அன்னம் பறை

நிவந்தாங்கு' (குறு.205:2)

(2) விரைவு _ speed

'நிரை பறை அன்னத்து அன்ன,

விரை பரிப் புல் உளைக் கலிமா

மெல்லிதின் கொளீஇய'

(அகம்.234: 3-4)

(3) ஊக்கம் - encouragement


அன்னம்

'அம் கண் மால் விசும்பு புதைய,

வளி போழ்ந்து, ஒண் கதிர்

ஞாயிற்று ஊறு அளவாத் திரிதரும்

செங் கால் அன்னத்துச் சேவல்

அன்ன' (மது.384-386)

(4) விடியல் / வைகறை - dawn

'அன்னம் கரைய ,.. .. இரவுத்

தலைப் பெயரும் ஏம வைகறை'

(மது.675,686)

(5) பயணம் / புலம் பெயர்தல் -

travel,migrate

'அன்னச் சேவல்! அன்னச் சேவல்!

. .. .. குமரிஅம் பெருந் துறை

அயிரை மாந்தி வடமலைப்

பெயர்குவை ஆயின்' (புறம்.67;1-7)

(6) வெண்மை / தூய்மை white/ pure


'தூய மால்வரைச் சோதியில்

மூழ்கியொன்றாய அன்னமும்

காணாது அய்ர்க்குமால்'

(பெரிய.மு.கா.7:3-4)

(ஆ) அன்னம் துணையோடு

ஆடுதல் Annam tunaiyotu atutal

(7) இன்பம் - pleasure

'அன்னம் துணையோடு ஆடக்

கண்டு நென்னல் நோக்கி நின்றார்

ஒருவர் நென்னல் நோக்கி நின்றார்

அவர்நம் பொன்னேர் சுனங்கில்

போவார் அல்லர்' (சிலப்.7.45)

(இ) அரைச அன்னம் Araica anam

(royal swan)

(8) சீவகன்

விரைசெய் தாமரை

மேல்விளையாடிய அரைச

அன்னம் அமர்ந்துள ஆயினும் '

(சீவக.1401:1-2)

(ஈ) அன்ன ஊர்தி Annaurti

(Brahma)

(9) அறிவு - wisdom


'அன்ன ஊர்தியை முதல் ஆம்

அந்தணர் மாட்டு அருந்தெய்வம் '

(கம்ப. ஆரண்.55:3)

(உ) அனம் Anam


(10)அழகு - beautiful

'பொற்பு அன ஊர்தியை உள்ளாது

ஒழுகின்னா' (இன்னா. கட. வா: 2)