பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழற்குட்டம்

'மத நனி வாரணம் மாறுமாறு

அதிரப்ப, எதிர்குதிர் ஆகின்று

ஆர்ப்பு, மலை முழை'

(பரி.8:20-21)

(ஈ) வரை கிழிப்பு Varai kilippu

(9) இருள் - darkness

'வரை கிழிப்பன்ன ' மை இருள்

பரப்பி' (நற்.154:2)

(ஒப்பு) Cave, Cavern இதயம்,

இரகசியம், உலகம், கடவுளர்

உறைவிடம், கருவறை, தொடக்கம்,

நிலைபேறு, பாதுகாப்பு, பிறப்பு,

மறுபிறப்பு, மறைவிடம், மனித

அறிவு,மீட்பு, வழமை: இருள்,

இறப்பு, எச்சரிக்கை, கீழுலக்த்தின்

வாயில், சூழ்ச்சி, புதைவு,

பொய்ம்மை, மயக்க நிலை.

அழற்குட்டம் Alarkuttam

(1) சினம் - anger

'ஈண்டழற் குட்டம் போல

வெரியெழத் திருகி நோக்கி'

(சீவக.1079:1)

அற்றவர் அருநிதியம் பெறுதல்

(1) மகிழ்ச்சி - joy

'அற்றவர்கள் அருநிதியம் பெற்றார்

போல் அருமறையோர் முற்றவுளம்

களிகூர முன்னின்று கூத்தாடி'

(பெரிய.25.18)

அறல் (மணல்) Aral (black sand)

(1) நுண்மை - minute

'நுண்ணுறல் போல நுணங்கிய

வைங்கூந்தல்' (ஐந்.ஐம்.27:2)

அறுகை Arukai (cynodon grass)

(1) பிணிப்பு - bond

'மணி வார்ந்தன்ன மாக்கொடி

அருகைப் பிணங்கு அரில்

மென்கொம்பு பிணையொடு

மாந்தி' (குறு.256:1-2)

(2) வளமை - fruitful

'கொழுங்கொடி அறுகையும்

குவளையும் கலந்து விளங்குகதிர்த்

தொடுத்த விரியல் சூட்டிப்

பாருடைப்பனர் போல் பழிச்சினர்


அறுமூன்று

கைதொழ ஏரொடு நின்றோர்

ஏர்மங்கலமும்' (சிலப்.10:132-135)

(ஆ) அறுகு Aruku

(3) வளம் - thrive

'அறுகு சிறுபூளை

நெல்லோடுதூஉய்ச் சென்று'

(சிலப்.9:43)

(இ) புண்ணியப் புல் Punniyap pul

(4) உயர்வு, மதிப்பு

'வெண்ணிற மலரும் தண்ணறும்

சாலியும் புண்ணியப் புல்லும்

பொன்னொடு முறைமையின்'

(பெருங்.இலா.4 :152-153)

அறுபது Arupatu

(1) தாத்துவிகம் -concept

'அறுபதும் பத்தும் எட்டும்

அறினோடு அஞ்சும் நான்கும்

துறுபறித்து அளைய நோக்கிச்

சொல்லிற்று ஒன்றாகச் சொல்லார்'

(சுந்.தேவா.926:1-2)

அறுமீன் Arumin (a star)

(1) உயர்வு - high

'அறுமீன் பயந்த அறம் செய்

திங்கள் செல் சுடர் நெடுங்கொடி

போல' (நற்:202:9-10)

(ஆ) ஆரல்மீன் Aralmin

(2) அழகு - beauty

'அரவுக்கன் அணியுறழ் ஆரல்மீன்

தகையொப்ப' (கலி.64:4)

(இ) ஆஅல் Aal

(3) சிறப்பு - greatness

'அகல் இரு விசும்பின் ஆஅல்

போல' (மலை.100)

(ஒப்பு) Star கடல் தெய்வங்கள்,

பால் வேறுபாடற்ற ஒற்றுமை,

அறுமூன்று Arumunru

(1) வித்தைகள் - knowledge

'அறுமூன்றும் நான்மூன்றும் ஆனார் போலும்'

(திருநா.தேவா.820:2)