பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடுக்கை

(9) வீரம் - brave

'துவர்செய் ஆடைச் செந் தொடை

மறவர்' (நற்.33:6)

(10) அழகு - beautiful

'அம் துவர் ஆடைப்

பொதுவனோடு' (கலி.102:37)

(ஏ) பொலம் புரி ஆடை Polam

puri atai (golden dress)

(11) வளமை - prosperity

'பொலம் புரி ஆடை! வலம்புரி

வண்ண!' (பரி.3:88)

(ஐ) ஒன்றன் கூறு ஆடை Onran

kuru atai (single dress)

(12) வறுமை - poverty

'ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே

ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே

வாழ்க்கை' (கலி.18:10-11)

(ஒ) நிலந்தோய ஆடை உடுத்தல்

Nilantoya atai ututtal (flowing attire),

(wearing dress touching the floor)

(13) பெருமிதம் - sense of pride

'இருநிலம் தோயும் விரிநூல்

அறுவையர்' (பதி.34:3)

(14) மேன்மை

'புறங்கால் தாழ்ந்து போர்வை

முற்றி நிலம்தோய்பு உடுத்த

நெடுநுண் ஆடையர் தானை

மடக்கா மான மந்தர் அண்ணாந்து

இயலா ஆன்றுபுரி அடக்கத்து'

(பெருங்.உஞ்.32:63-66)

(ஒ) துகில் Tukil

(15) அழகு - beautiful

'பிறை நுதல் பொறித்த சிறு நுண்

பல் வியர் அம் துகில் தலையில்

துடையினள்' (நற்.120:7-8)

(16) நுண்மை - minute

'வீடுறு நுண் துகில் ஊடு வந்து

இமைக்கும்' (நற்.366:2)

(ஒள) கலிங்கம் Kalinkam

(17) வளமை - prosperity

'நீர்ப்படு பருந்தின் இருஞ்சிறகு

அன்ன, நிலம்தின் சிதாஅர்

உடுக்கை



களைந்த பின்றை, நூலாக்

கலிங்கம் வால் அரைக் கொளீஇ'

(பதி.12:19-21)

(க) காழகம் Kalakam

(18) தலைமை - chief

'நிரைதொடி நல்லவர்

துணங்கையுள் தலைக் கொள்ள,

கரையிடைக் கிழிந்த நின் காழகம்

வந்து உரையாக்கால்?'

(கலி.73:16-17)

(ங) காழகம் நீத்தல் Kalakam nittal

(lose the garment)

(19) இறப்பு, தீமை - death, evil

'களிறு மேல் கொள்ளவும், காழகம்

நீப்பவும்' (புறம்.41:9)

(ச) உடை Utai

(20) அழகு - beautiful

'பால் அன்ன மேனியான் அணி

பெறத் தைஇய நீல நீர் உடை

போல, தகை பெற்ற வெண் திரை'

(கலி.124:2-4)

(ஞ) கரை பறைந்த உடை Karai

parainta utai (border torn dress)

(21) வறுமை - poverty

'பண்டுஅறி வாரா உருவொடு, என்

அரைத் தொன்றுபடு துளையொடு

பருஇழைபோகி, நைந்துகரை

பறைந்த என் உடையும், நோக்கி, ..

.. .. நிரயத்து அன்னஎன்

வறன்களைந்து' (புறம்.376:9-15)

(ட) சீரை (மரவுரி) Cirai

(22) தவம், துறவு - asceticism, penance

'சீரை தைஇய உடுக்கையர்'

(திருமுரு,126)

(ண) பட்டு உடை Pattu utai (silk

dress)

(23) வளமை - prosperity

'பாசி வேரின் மாசொடு குறைந்த

துன்னற் சிதாஅர் நீக்கி, தூய

கொட்டைக் கரைய பட்டுஉடை

நல்கி' (பொரு.153-155)