பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடுக்கை

(ழ) சீரை (மரவுரி) Cirai

(34) தவம்

'பொரு அருங் குமரரும் போயினார்

புறம் திரு அரைத் துகில் ஒரீஇ

சீரை சாத்தியே' (கம்ப.அயோ.440:

3-4)

(ள) செங்கூறை Cenkurai

(35) பௌத்த சமயம்

'குலம்பொய்யே எனக் கூறும்

செங்கூறையாய்' (நீலகேசி.534:3)

(ற) செம்படர் Cempatar

பௌத்த சமயம்

'சிறையின் மிகுமால் இது

செம்படவர்கள் இறைவன் உறையும்

இடமாம் எனலும்' (நீலகேசி.464:

3-4)

(ன) தூத்துகில் வீசல் Tutukil vical

(36) சமாதானம், போர் நிறுத்தம்

'விடுகணை சென்று தேர்மால்

பின்முனை வீழ்தலோடும்

தொடுகழல் குருசில் நோக்கித்

தூத்துகில் வீசினானே'

(சீவக.1863:3-4)

(i) தொடு (தோலாடை) Totu

(37) வேடம் - hypocricy

'படைப்பெளிதாற் கேடரிதாற் பல

கள்வர் நவையாரால்

உடைக்கியைந்த ஒலியிற்றால் ஊன்

தருவார்க்கு உணர்த்துமால்

விடக்கமர்ந்த உள்ளத்தாய்

வேடமும் அறிவிக்கும்

தொடர்ப்பாடும் பெரிதென்றால்

தொட்டை நீ பூணியோ'

(நீலகேசி.273)

(ii) பீதக ஆடை Pitaka atai

(golden dress)

(38) மாண்பு - honour

'உடுத்துக் களைந்த நின் பீதக

ஆஅடை உடுத்துக் கலந்துண்டு'

(நாலா.9: 1-2)

(iii) புலித்தோலாடை Pulitolatai

(39) மறம் / வீரம்

உடுக்கை



உடைமேல் 'உரவன் புலியின் உரி

தோலாடை படநாகம்'

(திருஞான.தேவா.13:1-2)

(iv) பொலம்பூ ஆடை Polampu atai

(40) பொலிவு

'பொலம்பூ ஆடையில் பொலிந்து

தோன்றிய' (சிலப்.11:50)

(v) பொன் திகழ் அறுவை Pon

tikal aruvai

பொலிவு

'பொன் திகழ் அறுவை சாத்திப்

பூங்கச்சுப் பொலிய வீக்கி'

(பெரிய.3.11)

(vi) பொன்னாடை போர்த்தல்

Ponnatai porttal

(41) சிறப்பு

'பெரு நீராட்டணி பெட்கும்

பொழுதெனச் செம்பொன்

படத்துப் பேறுவலித்து இருந்த'

(பெருங்.உஞ்.39:4-5)

(vii) ஆடை போர்த்தல் Atai Porttal

(42) மானம், கற்பு

'மருங்கு வண்டு சிறந்தார்ப்ப

மணிப்பூ ஆடையது போர்த்துக்

கருங்கயற்கண் விழித்தொல்கி

நடந்தாய் வாழி காவேரி' (சிலப்.7:

25)

(viii) வெண்துகில் Ventukil

(43) வெற்றி

'வெண் துகிலிட்ட விசய முரசம்'

(பெருங்.39:24)

(44) மங்கல அறிவிப்பு

'நறுவெண் சாந்தொடு மாலை

அணிந்து மறுவில் வெண்துகில்

மருங்கணி பெறீஇ'

(பெருங்.இலா.2:35-36)

(ix) வெள்ளணி Vellani

(45) பிறந்த நாள்

'வெள்ளணி அணிந்த ஞான்றே

வேந்தர்தம் முடியில் கொண்ட'

(சீவக.614:1)