பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரோகிணி

'உரம்தலைக் கொண்ட உரும்' இடி

முரசமொடு' (திருமுரு.121)

(ஈ) உருமு Urumu

(16) சினம் - angry/anger

'உருமுச் சிவந்து எறியும் ஓங்கு

வரை ஆறே!' (நற்.255:11)

(உ) இடி வீழ்தல் Iti viltal

(thunderbolt)

(17) தீமை, அழிவு

'.. . .. உயர் வான் இடியும்

வீழ்ந்திடும்' (கம்ப.ஆரண்.431:2-3)

(ஒப்பு) Thunder, Thunderbolt

'ஆக்கம், ஆற்றல், கடவுளரின்

குரல், செழிப்பு, படைப்பாற்றல்,

வளமை, வேகம்; அழிவு,

கொடுமை, சினம்.

உரோகிணி (a star) பார். "சகடம்'

உலக்கை Ulakkai (pestle)

(1) திண்மை - firmness

'பாசவல் இடித்த கருங்காழ்

உலக்கை '(குறு.238:1)

(2) மாட்சி, மாண்பு - greatness

'தொடி மாண் உலக்கைத் தூண்டு

உரல் பாணி' (அகம்.9:12)

(ஆ) உலக்கைமேல் காக்கை

Ulakkaimel kakkai (crow on the pestle)

(3) நிலையின்மை, வீண் -

transitoriness,waste

'நிலத்தின் மிகையாம்

பெருஞ்செல்வம் வேண்டி நலத்தகு

வேந்தருள் நல்லாரைச் சார்ந்து

நிலத்து நிலைகொள்ளாக் காலரே

காணின் உலக்கைமேல்

காக்கையென் பார்'

(பழமொழி.157)

(ஒப்பு) Pestle இலிங்க உரு,

உழவு, நோய்களை நீக்குதல்;

இறப்பு.

உலகம் Ulakam (world)

(1) நிலையாமை / நிலைபேறின்மை

transitoriness

உலகம்



'பாங்கரும் சிறப்பின் பல்லாற்

றானும் நில்லா உலகம் புல்லிய

நெறித்தே' (தொல்.1024)

(2) விரிவு - broad, wide

'நனி இரும் பரப்பின் இவ்

உலகுடன் உறுமே' (ஐங்.409:4)

(3) பேரளவு - huge

'வருக என வேண்டும்

வரிசையோர்க்கே பெரிதே உலகம்;

பேணுநர் பலரே' (புறம்.207:6-7)

(4) அழிவின்மை, உறுதி - stable,

strong

'உலப்பி லுலகத் துறுதியை

நோக்கிக் குலைத்தடக்கி நல்லறம்

கொள்வார்க் கொளுத்தல்

மலைத்தழு துண்னாக் குழவியைத்

தாயர் அலைத்துப்பால் பெய்து

விடல்' (பழமொழி.363)

(ஆ) நிலம் Nilam (land)

(5) பேரளவு - huge

'மா நிலம் சேவடி ஆக'

(நற்.கட.வா: 1)

(6) நிலைபேறு - stable

'நிலம் புடைபெயர்வதாயினும்'

(நற்.289:2)

(7) அளவின்மை / எல்லையின்மை -

limitless / boundless

'நிலம், நீர், வளி, விசும்பு என்ற

நான்கின் அளப்பு அரியையே'

(பதி.14:1-2)

(8) பெண் - woman

'நிலமகள் அழுத காஞ்சியும்'

(புறம்.365:10)

(9) பொறுமை - patience

'அகழ்வாரைத் தாங்கும் நிலம்

போலத் தம்மை இகழ்வார்ப்

பொறுத்தல் தலை' (குறள்.151)

(இ) நிலம் புடைபெயர்தல் Nilam

putaipeyarthal (become topsy- turvy)

(10) அரியதன்மை, இயல்பின்மை

rare, unnatural

'நிலம் புடைபெயரினும் .. ..

(குறு.373:1)

(ஈ) ஞாலம் Nalam (earth)

(11) பேரளவு - huge