பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர் எழுத்து

(உ) காயமும் ஆவியும் Kayamum

aviyum

(11) இணக்கம்

'காயமும் ஆவியும் நீங்கள்

சிற்றம்பல வன்கயிலை'

(திருக்கோ.16:207.1)

(ஒப்பு) Soul, Spirit ஆதாரம்,

இணைவு, இயக்க ஆற்றல்,

உயிர்ப்பு, உள்ளுறை ஆற்றல்,

உளச்சான்று, ஒற்றுமை, சீர்மை,

சுவாசம், நிலைபேறு, பாதுகாப்பு,

புலப்பாடின்மை, முழுமை,

வாழ்வியல் ஆற்றல்.

உயிர் எழுத்து Uyir eluttu

(1) இயக்கம் - active

'இழைக்கும் எழுத்துக்கு உயிரே

ஒத்தியால்' (சுந்.தே.1010:1)

உரல் Ural (mortar)

(1) வலிமை - strength

'உரற்கால் யானை ஒடித்து உண்டு

எஞ்சிய' (குறு.232:4)

(ஒப்பு) Mortar கல்வி, பாலியல்

உரும் Urum (thunder)

(1) கொடுமை - cruelty

'காலொடு பட்ட மாரி மால் வரை

மிளிர்க்கும் உருமினும் கொடிதே'

(நற்.2:9-10)

(2) வலிமை - strength

'உர உரும் உரறும் நீரின்'

((நற்.238:8)

(3) வேகம், ஆற்றல், அழிவு,

கார்காலம் - speed, ability,

destruction, rainy season

'நெடுவரை மருங்கின் பாம்புபட

இடிக்கும் கடுவிசை உருமின்

கழறுகுரல் அளைஇக் காலொடு

வந்த கமஞ்சூல் மாமழை!'

(குறு.158:1-3)

(4) ஊக்கம் - encouragement

'உரும் எனச் சிலைக்கும்

ஊக்கமொடு பைங்கால்'

(அகம்.61:6)

(5) கடுமை - fierceness

உரும்



'இளையது ஆயினும் இளை அரா

எரியும் அரு நரை உருமின்'

(புறம்.58:6-7)

(6) கொலை - killing

'கார் எதிர் உருமின் உரறி,

கல்லென, ஆர் உயிர்க்கு அலமரும்

ஆராக் கூற்றம்!' (புறம்.361:1-2)

(7) வன்கண்மை, வெம்மை, சினம் -

cruel,heat,anger

'வலியின் தப்பும் வன்கண்

வெஞ்சினத்து உருமும்'

(குறி.254-255)

(ஆ) ஏறு Eru

(8) முழக்கம் - rumbling

'தழங்கு குரல் ஏறோடு முழங்கி,

வானம்' (நற்.7:5)

(9) வலிமை, கார்காலம் - strength,

rainy season

'சிலை வல் ஏற்றொடு செறிந்த இம்

மழைக்கே' (நற்.112:9)

(10) அழிவு, கொலை - destruction,

killing

'ஈர்ங் குரல் உருமின் ஆர் கலி நல்

ஏறு பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு

வரை பொத்தி, மையல் மடப் பிடி

இணைய, கை ஊன்றுபு இழிதரு

களிறு எறிந்தன்றே' (நற்.114:9-12)

(11) ஆற்றல் - power

'மரம் தின்னூஉ வரை உதிர்க்கும்

நரை உருமின் ஏறு அனையை'

(மது. 62-63)

(இ) இடி Iti

(12) முழக்கம், அச்சம் - rumbling,

fear/frighten

'புலியொடு பொருத புண் கூர்

யானை நற் கோடு நயந்த அன்பு

இல் கானவர் விற் சுழிப்பட்ட

நாமப் பூசல் உருமிடை கடிஇடி

கரையும்' (நற்.65:5-8)

(13) கார்காலம் - rainy season

'காரெதிர் கலிஒலி கடிஇடி

உருமின் ஐயம் கறங்க'

(கலி.105:24)

(14) கடுமை - fierceness

'கடிதுஇடி உருமொடு கதழ் உறை

சிதறி' (அகம்.162:5)

(15) வலிமை - strength