பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழுந்தின் காய்

'பொன் புனை உழிஞை வெல்

போர்க் குட்டுவ!' (பதி.22:27)

(4) மென்மை / நொய்ம்மை - soft,

fragile

'பூ அல்ல; பூளை, உழிஞையோடு,

யாத்த புன வரை இட்ட வயங்கு

தார்ப் பீலி' (கலி.140:4-5)

உழுந்தின் காய் Uluntin kay (a bean)

(1) பனிக்காலம் - winter

'இரும்பனிப் பருவத்து மயிர்க்காய்

உழுந்து' (நற்.89:5)

உழைக்கலம் Ylaikkalam (side bowls)

(1) மங்கலம் - auspicious

'மங்கல உழைக்கலம் மருங்கு

சேர்ந்தன' (சூளா.88:2)

உளி Uli (chisel)

(1) கூர்மை - sharp

'கொல்வினைப் பொலிந்த கூர்வாய்

ஏறிஉளி' (குறு.304:1)

(ஒப்பு) Chisel அகநிலைக்கூறு,

ஆக்க சக்தி, இய்ற்படிவம்,

ஒழுக்கம், தனித்தன்மை,

பொருளின் தன்மைக்கூறு,

வடிவமைத்தல்.

உறந்தை Urantai (a city)

(1) சோழர் - chola

'மறம் கெழு சோழர் உறந்தை

அவையத்து, அறம் கெட

அறியதாங்கு' (நற்.400:7-8)

(2) வளமை - prosperity

'வளம் கெழு சோழர் உறந்தைப்

பெருந்துறை' (குறு.116:2)

(3) புகழ் -fame

'கெடல் அரு நல் இசை உறந்தை

அன்ன' (அகம்.369:14)

உன்னநிலை Unnanilai (Unnam, a tree,

looked to for omen)

(1) நிமித்தம்/வீரம் - omen / bravery

'வீரர் உடல் வேந்தடுக்கிய உன்ன

நிலையும்' (தொல்.1006:8)

ஊசி



(ஆ) உன்னம் சாய்தல் Unnam

caytal (withering of Unnam)

(2) தீமை - bad,evil

'புன் கால் உன்னம் சாய, தெண்

கண் வறிது கூட்டு அரசியல்

இரவலர்த் தடுப்ப. (பதி.40:17-18)



ஊசல் Ucal (swing)

(1) அசைவு / இயக்கம்

movement/action

'ஊசல் உறு தொழில் பூசல்

கூட்டா' (நற்.90:10)

'அசை வரல் ஊசல் சீர் அழித்து,

ஒன்று பாடித்தை' (கலி.131:34)

(2) போக்கு வரவு - go forward and

backward

'உழையர் கூவ புக்கு ஏகு எனப்

பெயர்வது ஓர் ஊசலின்

உளதாகும்' (கம்ப.சுந்.292:5-6)

(3) நிலையாமை, அசைவு -

transitoriness,oscillation

'உறுகயிறு ஊசல் போல ஒன்று

விட்டு ஒன்று பற்றி மறுகயிறு

ஊசல் போல வந்து உலவு

நெஞ்சம் பெறுகயிறு ஊசல்

போலப் பிறைபுல்கு சடையாய்

பாதத்து அறுகயிறு ஊசல்

ஆனேன் அதிகை வீரட்டனீரே'

(திருநா.தேவா.107)

(ஒப்பு) Pendulam, Swing

அசைவு, அன்பு, காதல், காலம்,

நீதித்தராசு, வாழ்க்கை; இறப்பு.

ஊசி Uci (needle)

(1) கூர்மை - sharp

'அரம் தின் ஊசித் திரள் நுதி

அன்ன, திண் நிலை எயிற்ற

செந்நாய் எடுத்தலின்'

(அகம்.199:-8-9)

(ஆ) கொற்சேரி ஊசி விற்பார்

Korceri uci virpar

(2)வீண், பயனின்மை - waste, useless

'கொண்டுழிப் பண்டம்

விலையொரீஇக் கொற்சேரி