பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்



முதலில் படிக்கவும் எழுதவும் கற்பிக்கப் பெற்றது. படிப்பையும் எழுத்து முறையிலேயே கற்பித்தனர். எழுத்துகள் ஒன்று சேர்ந்து சொற்களாதலையும், சொற்கள் பல சேர்ந்து சொற்றொடர்களாகி ஒரு கருத்தை விளக்குதலையும் கண்டு அவ்வாறே காரண காரிய முறைப்படி எழுத்து, சொல், தொடர் மொழி என்ற முறையில் கற்பித்தல் நடைபெற்றது. இம் முறையில் சில சொற்களையும் சொற்றொடர்களையும் படிக்கத் தெரிந்ததும் மூதுரை, நீதி நூல் போன்ற சிறிய அறநூல்களைப் படிப்படியாகக் கற்பிப்பர்.பின்னர் நிகண்டு, நன்னூல், அந்தாதி, கலம்பகம் முதலியவற்றையும் கற்பிப்பர்; நாளடைவில் பெரிய இலக்கண இலக்கியங்கள் கற்பிக்கப் பெறும். திண்ணைப்பள்ளிகளிலும் தொடக்க நிலைப் பள்ளிகளிலும் செய்யுளைச் சொற்பொருள், பொழிப்புரை, கருத்துரை என்ற முறையில் ஆசிரியர் எடுத்துக் கூறுவது, அதனை மாணாக்கர் கேட்டுக் கொண்டிருப்பது, முதல் நாள் கற்பித்தவற்றை மறுநாள் ஒப்புவிக்கச் செய்வது, அன்று கற்பித்தவற்றைத் திரும்பக் கூறச் செய்வது முதலியவை நடைமுறையில் மேற்கொள்ளப்பெற்ற முறைகளாகும். இலக்கணம் தனிப்பாடமாகவே கற்பிக்கப் பெற்றது; எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற முறையில் இலக்கணம் கற்பித்தல் நடைபெற்றது. சிறுவயதிலேயே இலக்கணத்தைக் கற்பித்தனர். மனப்பாடம் செய்யும் பழக்கம் எல்லா நிறைகளிலும் வற்புறுத்தப் பெற்றது. பாடத் திட்டம் முக்கிய இடம் பெற்றதேயன்றி, படிக்கும் மாணாக்கர் மனநிலையினை ஒருவரும் சிந்தித்தார் இலர். ஆசிரியர்கள் உளவியலறிவு பெறாததால் கற்போர் மனநிலைக்கு அப்பாற்பட்ட செய்திகளை அவர்கள் உள்ளத்தில் புகுத்தினர். குல்லாய்க் கேற்றவாறு தலையைச் சரிப்படுத்தப்பெறும் செய்கையாகவே இருந்தது. பழைய கற்பிக்கும் முறை. வாய்மொழிப்பயிற்சி, வினா-விடை முறை, கற்பிக்கும். துணைக் கருவிகள், விளையாட்டுகள், விளையாட்டு முறை ஆகிய கூறுகள் அக்காலக் கற்பித்தலில் இல்லை. மாணாக்கர் அடைந்த தண்டனைக்கும் செல்வாக்கு இருந்தது கல்வியியலும் அறிவியல் பார்வையையும் அறிவியல் போக்கையும் நோக்கையும் பெற்று விட்டதால் கல்வியியலும் ஈண்டு இடம் பெறுவதாயிற்று.