பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

125


முடிந்தது. துத்தநாகம் அளிக்கப்பெறாத செடிகளைக் கவனித்த பொழுது அவை சிறந்த முறையில் கனிகளைக் கொடுக்கவில்லை என்பதும், அவை ஈந்த கனிகளிலும் சிறந்த ஊட்டச் சத்துகள் இல்லை என்பதும் தெரிய வந்தன.

6. தொழில் துறையில்

கதிரியக்க ஐசோடோப்புகள் தொழில் துறையிலும் பெரிதும் பயன்படுகின்றன. இவற்றின் பயன்களை மூன்று விதமாக வகைப்படுத்தலாம்.

1. அளவிடுதல்: கதிரியக்கப் பொருள்களிலிருந்து வெளியாகும் கதிரியக்கக் கற்றையின் தீவிரத்தில் நேரிடும் மாற்றத்தைக் கணக்கிட்டு அளவிடுதல் செயல்கள் மேற்கொள்ளப் படுகின்றன. கதிரியக்கமுள்ள கனத்தை அளக்கும் கருவி நடைமுறைச் செயல்களைக் கண்டறியும் கருவிகளில் தலைசிறந்தது. அமெரிக்காவில் இன்று 200க்கு மேற்பட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தகடு வடிவத்திலுள்ள பல்வேறு பொருள்களின் கனத்தைக் கண்டறிவதற்கு இக் கருவி பயன்படுகின்றது. இவ்வாறு அளவிடப் பெறும் பொருள்களில் மைத்தாள், மெழுகுத்தாள், பொருள்களை மூடுவதற்குப்பயன்படுத்தும் தாள் போன்ற காகித வகைகளும்; அலுமினியத் தகடு, தாமிரத்தகடு, எஃகுத் தகடு, தகரத்தகடு போன்ற தகடு வகைகளும்; பல்வேறு வகைப் பிளாஸ்டிக் பொருள்கள், ரப்பர் பொருள்கள், கூரை வேய்வதற்கும் தரையில் பரப்புவதற்கும் பயன்படும் பொருள்கள்; கண்ணாடிப் பொருள்கள், கயிறு இழைகள், ஒளிப்படம் பிலிம்கள், பூச்சுப் பூசிய வேறு தகடு வகைகள் ஆகிய பொருள்களும் அடங்கும்.

சில உற்பத்தித் தொழிற்சாலைகளில் பொருள்களைப் பொட்டலங்களிலும் டப்பாக்களிலும் அடைக்கும் செயலில் மேற் படிப் பொட்டலங்களைச் சோதிப்பதற்குக் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன. பொருள் நிரம்பிய பொட்டலங்கள் அல்லது டப்பாக்கள் இயந்திர விசையால் நிரப்பப் பெற்று ஒன்றன்பின் ஒன்றாகச் சென்று கொண்டே இருக்கும். ஒரு பொட்டலத்தில் சரியான அளவில் பொருள்