பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்


பைங்கூழ் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் களைகளை அழித்தப் பற்றியும், தாவரங்களுக்குப் பூச்சிகளால் நேரிடும் அழிவுபற்றியும் ஆராய்ச்சி நடைபெற்றுவருகின்றது.கால் நடைப் பண்ணைகளில் தோன்றும் சிலபீடைகளை ஒழிப்பதற்கும் கதிரி யக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன.

4. இலவலேசத் தனிமங்கள்: நுண்சத்துப் பொருள்கள் (Micro nutrients) என்பவை தாவரங்களுக்கும் பிராணிகட்கும் ஊட்டம் அளிக்கும் தனிமங்கள். அவற்றின் வளர்ச்சிக்கு இவை மிகச் சிறிய அளவுகளில் (இலவலேச) தேவைப்படுகின்றன. அயம், தாமிரம், மாங்கனீஸ், போரன், மாலிப்டினம், கோபால்ட்டு, அயோடின், துத்தநாகம் ஆகியவை இலவலேசத் தனிமங்களாக உள்ளன என்று கண்டறிந்துள்ளனர். எடுத்துக் காட்டாகச் சீமைத்தக்காளிச் செடிகளுக்குத் துத்தநாகம் தேவையா என்று அறிவியலறிஞர்களும் காய்கறித் தோட்டக்காரர்களும் அறிய விரும்பினர். அன்றியும் அவை செடியின் வளர்ச்சிக்கு மட்டிலும் தேவையா, அன்றிச்சாறு நிறைந்த செந்நிறக் கனியினுள்ளும் துத்தநாகம் செல்கின்றதா, அங்கிருந்து நம் குருதியோட்ட மண்டலத்திற்கும் அது செல்கின்றதா என்பவற்றையும் கூட அறிந்து கொள்ள விழைந்தனர்.

சீமைத் தக்காளி நாற்றுகளிலுள்ள செடிகளில் துத்தநாகக் கதிரியக்க ஐசோடோப்புகளை ஊசிமூலம் குத்திப் புகுத்தினர். அந்த நாற்றுகள் சில அங்குல உயரம் இருக்கும்பொழுது அவற்றில் துத்தநாகம் பரவியிருந்த இடத்தைக் கைகர் எண்- கருவியால் துலக்கி அறிந்தனர். சில நாட்களில் அச்செடிகள் முழு வளர்ச்சியினை எய்தியதும் செடிகளின் கிளைகள், இலைகள் தண்டுகள் முதலிய ஒவ்வொரு பகுதியிலும் கைகர் எண்-கருவியினை நகர்த்தி அக்கருவியின் கிளிக் ஒசையில் துத்தநாகத்தின் இருப்பை அறிந்தனர். இறுதியாகத் தக்காளிச் செடிகள் பூத்துக் காய்த்துப் பழுத்துக் கனிகளை ஈந்தன. அந்தக் கனிகளில் எண் கருவியை வைத்துப் பார்த்த பொழுது 'கிளிக்' ஓசை கேட்டது. கனிகளிலும் செடிகளில் குத்திப் புகுத்திய கதிரியக்கத் துத்தநாகம் இருப்பது தெரிந்தது, எனவே, சீமைத் தக்காளிப் பழத்தில் துத்தநாகம் உள்ளது என்றும், அது பழுப்பதற்குத் துத்தநாகம் இன்றியமையாதது என்றும் அறிய